/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
கணினி மொழியைவிட, மனித மொழி எப்படி சிறந்தது?
/
கணினி மொழியைவிட, மனித மொழி எப்படி சிறந்தது?
PUBLISHED ON : ஜன 22, 2026 07:51 AM

கணினிகளின் மொழியான நிரல்கள் துல்லியமானவை. அவற்றோடு ஒப்பிடுகையில், மனித மொழி குழப்பமானதாகத் தோன்றும். ஏன் நாம் இயந்திரங்களைப் போலத் தர்க்கரீதியாகப் பேசுவதில்லை? கணினிகள், தகவல்களை '0' மற்றும் '1' எனத் தரவுகளாகச் சுருக்குகின்றன. ஆனால், மனித மொழி வாழ்நாள் அனுபவங்கள் மற்றும் சக மனிதர்களுக்குப் பொதுவான சூழல்களை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுகிறது.
“நம் மொழியில் உள்ள இலக்கணமும், மீண்டும் மீண்டும் வரும் வடிவங்களும், மூளையின் வேலைப்பளுவைக் குறைக்கின்றன” என்கிறார் ஜெர்மனியிலுள்ள சார்லாந்து பல்கலை ஆய்வாளர் மைக்கேல் ஹான். சுருக்கப்பட்ட குறியீடுகள் மொழியில் அடுத்தடுத்து வரும்போது, அவற்றை விரித்துப் புரிந்துகொள்ள மூளை சிரமப்படுகிறது. அதற்குப் பதிலாக, ஓரளவிற்கு ஊகிக்கக்கூடியத் தன்மையுள்ள, குத்துமதிப்பான மனித மொழியை மூளை எளிதாகக் கையாள்கிறது.
தகவல்களை வெறும் தரவுகளாகப் பார்க்காமல், பொருள் செறிந்த அனுபவங்களாக மாற்றுவதால்தான் மனித மொழிகள் இன்றும் ஆழமானதாக இருக்கின்றன.
“இதுவே செயற்கை நுண்ணறிவுக்கும் நமக்கும் இடையிலான முக்கியமான இடைவெளி. நம் உரையாடல்களை உயிரோட்டமாக வைப்பதும் இதுதான்” என்கிறார் மைக்கேல் ஹான்.

