sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

 கூர்ந்து கவனித்தால் கண் சிமிட்டல் குறையும்!

/

 கூர்ந்து கவனித்தால் கண் சிமிட்டல் குறையும்!

 கூர்ந்து கவனித்தால் கண் சிமிட்டல் குறையும்!

 கூர்ந்து கவனித்தால் கண் சிமிட்டல் குறையும்!


PUBLISHED ON : ஜன 01, 2026 08:36 AM

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026 08:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மா ண்ட்ரியலில் உள்ள கான்கார்டியா பல்கலை ஆராய்ச்சியாளர்கள், ஒருவரின் கண் சிமிட்டும் விகிதத்திற்கும் அவர் ஒரு செய்தியைக் கவனிக்க எடுக்கும் முயற்சிக்கும் இடையே மிக நெருங்கியத் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, பின்னணி இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களில் பேச்சைக் கூர்ந்து கவனிக்கும்போது, மனிதர்கள் வழக்கத்தை விட மிகக் குறைவாகவே கண் சிமிட்டுகின்றனர். மூளையானது தனது கவனத்தையும் அறிவுசார் ஆற்றலையும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஒருமுகப்படுத்த முயலும்போது இத்தகைய மாற்றம் நிகழ்கிறது.

'ட்ரெண்ட்ஸ் இன் ஹியரிங்' என்ற இதழில் வெளியான இந்த ஆய்வில், அதிநவீன 'ஐ-டிராக் கிங்' கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டு தன்னார் வலர்களின் கண் அசைவுகள் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டன. கண் சிமிட்டுதல் என்பது கண்களை ஈரப்பதமாக வைப்பதற்கான வெறும் அனிச்சைச் செயல் மட்டுமல்ல; அது மூளையின் கடின உழைப்பைக் காட்டும் ஒரு முக்கியக் குறியீடு என்பதை இந்த முடிவுகள் நிரூபிக்கின்றன.

உணர்வுசார் செயலாக்கம் குறித்த நமது புரிதலை இது மேம்படுத்துவதோடு, மருத்துவப் பரிசோதனைகளிலும் அன்றாடத் தகவல் பரிமாற்றத்திலும் ஒருவரின் மூளைச் செயல்பாட்டுச் சுமையை எந்தவிதச் சிரமமும் இன்றி துல்லியமாகக் கண்டறிய இந்த ஆய்வு புதிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us