தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/உணவுக்கும், துாக்கத்திற்கும் தொடர்புண்டா?

உணவுக்கும், துாக்கத்திற்கும் தொடர்புண்டா?

உணவுக்கும், துாக்கத்திற்கும் தொடர்புண்டா?


PUBLISHED ON : பிப் 27, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் உண்ணும் உணவுக்கும் நம் துாக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஐ.ஐ.எஸ்., என்ற சர்வதேச அறிவியல் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

மொத்தம் 4,825 பேரின் உணவு முறையும், துாக்க முறையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நம்முடைய உணவில் மாவுச்சத்து, பல வகையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட நுண் சத்துக்களும் உள்ளன. ஒவ்வொரு சத்தும் துாக்கத்தை எப்படி பாதிக்கின்றன என்று கண்டறிவது தான் இந்த ஆய்வின் நோக்கம்.

ஆய்வின் முடிவில் புரதம், நார்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்ல நீண்ட நேரத் துாக்கத்தைத் தரும் என்றும், அதிகமான சோடியம் உள்ள உணவுகள் துாக்கத்தைப் பாதிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடும் போது அடிக்கடி இரவில் துாக்கத்தின் இடையே எழுகின்ற சூழல் வருகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us