sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/இஸ்ரோ ஏவும், கனரக அமெரிக்க செயற்கைக்கோள்

இஸ்ரோ ஏவும், கனரக அமெரிக்க செயற்கைக்கோள்

இஸ்ரோ ஏவும், கனரக அமெரிக்க செயற்கைக்கோள்


PUBLISHED ON : ஆக 14, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்மையில், 'நிசார்' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. அடுத்து, அமெரிக்கா உருவாக்கிய, 6,500 கிலோ எடையுள்ள 'ப்ளூபேர்ட்' (BlueBird) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகிறது.

அதிநவீன 'எல்.வி. எம்.-3-எம்-5' ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இதனால், சர்வதேச விண்வெளிச் சந்தையில் இஸ்ரோவின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

'ப்ளூபேர்ட்' செயற்கைக்கோளில், புரட்சிகரமான தொழில்நுட்பம் உள்ளது.

எந்தவொரு சிறப்பு கருவியும் இல்லாமல், சாதாரண மொபைல் போன்களுக்கு, செயற்கைக் கோளிலிருந்தே, நேரடியாக அதிவேக இணைய இணைப்பை வழங்குவதே இதன் தனிச்சிறப்பு.

'ப்ளூபேர்டின்' 64 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ஆன்டெனா, தொலைதுாரக் கிராமங்களில் இருப்போரின் மொபைலுக்கும் நேரடியாக இணைய சேவையை வழங்கும்.

அமெரிக்காவின் இவ்வளவு பெரிய, முக்கியமான செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவுவது, இரு நாடுகளுக்கும் இடையேயான விண்வெளி ஒத்துழைப்பைப் வலுப்படுத்தும்.

இது இந்தியாவின் தொழில்நுட்ப ஆற்றலுக்கு ஒரு சான்றாக இருப்பதோடு, உலக விண்வெளித் தொழில்நுட்ப சந்தையில், இந்தியாவின் முக்கியத்துவத்தையும் உலகிற்கு உணர்த்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us