PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள மூன்றாவது பெரிய கிரகம் யுரேனஸ். இதற்கு மொத்தம் 28 நிலவுகள் உள்ளன. அவற்றுள் ஐந்து மிகப் பெரியவை, முக்கியமானவை. யுரேனஸ் குறித்தும் அதன் நிலவுகள் குறித்தும் நாம் அறிந்து கொண்ட தகவல்கள் பெரும்பாலும் நாசாவின் வாயேஜர் 2 விண்கலத்தால், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்டவை.
அதை வைத்துத் தான் இத்தனை ஆண்டுகள் யுரேனஸ் கோளும் இதன் நிலவுகளும் அடர்த்தியான பனி நிறைந்தவை, உயிர்கள் வாழத் தகுதியற்றவை என்று கருதப்பட்டு வந்தன.
தற்போது அந்த தகவல்களை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் யுரேனஸ் கிரகத்திற்கு அருகில் சென்று வாயேஜர் ஆய்வு செய்த போது அதீத சூரியப் புயல் வீசிக்கொண்டு இருந்ததால் அந்தத் தகவல்களில் பிழை இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர்.
வாயேஜர் விண்கலம் 986களில் அனுப்பிய தகவல்களை மறு ஆய்வுக்கு விஞ்ஞானி கள் உட்படுத்தி இருக்கின்றனர்.
இந்தத் தகவல்களில் இருந்து யுரேனஸின் முக்கிய நிலவுகளில் நிலப்பரப்புகளின் கீழ் கடல் இருக்கலாம் என்றும் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் கூட அங்கே இருப்பதாகவும் கூறுகின்றனர்.
2045ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா தன்னுடைய விண்கலத்தை யுரேனஸிற்கு அனுப்ப உள்ளது. அப்போது நமக்கு உண்மை முழுதாகத் தெரிய வரும்.

