/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
பேரண்டத்தின் ஒளியை மறைக்கும் காந்தப்புலங்கள்
/
பேரண்டத்தின் ஒளியை மறைக்கும் காந்தப்புலங்கள்
PUBLISHED ON : ஜன 22, 2026 07:52 AM

விண்வெளியில் உள்ள ராட்சதக் கருந்துளைகளிலிருந்து 'பிளேசர்' (Blazar) கதிர்கள் வெளிவருகின்றன. ஆனால், அவை பூமிக்கு வந்து சேரும் முன் மங்கிப்போகின்றன. ஏன்? பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மர்மத்தைக் கண்டறிய, பிரான்சிலுள்ள விஞ்ஞானிகள், 'செர்ன்' ஆய்வகத்திலேயே சிறிய 'நெருப்புப் பந்துகளை' உருவாக்கியுள்ளனர். சூப்பர் புரோட்டான் சின்க்ரோட்ரான் (SPS) முடுக்கியைப் பயன்படுத்தி, விண்வெளி கதிர்களைப் போன்ற எலக்ட்ரான்--பாசிட்ரான் பிளாஸ்மா கற்றைகளை அவர்கள் செயற்கையாக உருவாக்கினர்.
இந்த ஆய்வில், அந்த பிளாஸ்மா கற்றைகள் வியக்கத்தக்க வகையில் நிலையான தன்மையுடன் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் வாயிலாக, பிளாஸ்மா சிதைவுகளால், ஆற்றல் இழப்பு ஏற்படவில்லை என்பது உறுதியானது. மாறாக, விண்வெளியில் உள்ள பலவீனமான காந்தப்புலங்களே துகள்களைத் திசைதிருப்பி, அவற்றின் ஒளியைத் தொலைநோக்கிகளுக்கு புலப்படாதவாறு மறைக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வு முடிவுகள், நுண்- இயற்பியலையும் பிரமாண்ட விண்வெளி கண்காணிப்பையும் இணைப்பதோடு, விண்மீன் கூட்டங்களுக்கு இடையே, இன்றும் நிலவும் ஆதிகால காந்தப்புலங்கள் குறித்த புதிய புரிதலுக்கு வழிவகுத்துள்ளன.

