/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
மருத்துவ பொருட்களை சுமக்கும் நவீன ட்ரோன்
/
மருத்துவ பொருட்களை சுமக்கும் நவீன ட்ரோன்
PUBLISHED ON : நவ 06, 2025 12:00 AM

பெங்களூரில் உள்ள ஒரு ட்ரோன் நிறுவனம், ட்ரோன்களின் எடை மற்றும் உதிரி பாகங்களை குறைப்பதில் வெற்றி கண்டுள்ளது. இதன் வாயிலாக பார்சல் டெலிவரி செலவுகளை குறைக்க முடியும். இந்த ட்ரோன், ஹெலிகாப்டர் போல செங்குத்தாக கிளம்பி இறங்கும்; வால் பகுதியை தரையில் ஊன்றி நிற்கும். வானில் பறக்கும்போது, விமானம் போல படுகிடையாகப் பறக்கிறது.
இந்த ட்ரோன் தரையிறங்க 2 சதுர மீட்டர் இடம் போதும்; பெரும்பாலும் காற்றில் மிதந்தபடியே பார்சல்களை பாராசூட் அல்லது அதிர்வை தாங்கும் பெட்டிகள் மூலம் கீழே போடுகிறது. இந்த டெலிவரி ட்ரோனின் எடை 400 கிராம் மட்டுமே.
இது, மற்ற இந்திய சரக்கு டெலிவரி ட்ரோன்களின் எடையில் பத்தில் ஒரு பங்கு. ட்ரோனின் உடல் பகுதியையும், இறக்கையையும் இணைத்ததால், காற்றின் எதிர்ப்பு குறைந்து பறக்கும் துாரம் அதிகரிக்கிறது. இது, பேட்டரியின் மின்சாரத்தை சேமிக்கிறது.
இந்த ட்ரோன்களுக்கு இரண்டே விசிறிகள் தான். விமானம் போல இறக்கைகளும் உள்ளன. உள்நாட்டு உதிரிபாகங்களையும் பயன்படுத்துவதால் உற்பத்தி செலவும், இயக்கச் செலவும் குறைவு. இதனால், கடைசி மைல் டெலிவரி செலவு களை 50 மடங்கு வரை குறைக்க முடியும் என நிறுவனம் நம்புகிறது.
மருத்துவப் பொருட் களை கிராமப்புறங்களுக்கு வினியோகிக்கும் பணிக்கு இந்த ட்ரோன் பயன்படப் போகிறது. இந்த எளிமை யான பொறியியல் முயற்சி, இந்தியாவின் சிறிய சரக்கு பொட்டலப் போக்குவரத்தில் புரட்சி செய்யக்கூடும்.

