sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய கான்கிரீட்

சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய கான்கிரீட்

சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய கான்கிரீட்


PUBLISHED ON : ஏப் 25, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கான்கிரீட் கலவையைத் தயாரிக்க இன்றியமையாதது சிமென்ட். சிமென்ட் உற்பத்தியில் அதிக அளவிலான கரியமிலவாயு வெளியிடப்படுகிறது. இது புவி வெப்பமயமாதலை அதிகரித்து, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கிறது. இதற்கு மாற்றாகப் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் கான்கிரீட் தயாரிப்பில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

சமீபத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனம், சிமென்ட் பயன்பாட்டைப் பாதியாகக்குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக டைகால்சியம் சல்ஃபேட் (γ-C2S) எனும் வேதிப் பொருளைக் கலந்தது. பொதுவாக கான்கிரீட் உறுதி அடைவதே கான்கிரீட்டில் உள்ள நீரும், சிமென்டும் இணைந்து வேதிவினை புரிவதன் வாயிலாகத் தான். இந்த வேதிவினையில் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது.

ஆனால் γ-C2S, நீரை விடுத்து சுற்றுச்சூழலில் உள்ள கரியமில வாயுவுடன் வினைபுரிந்து உறுதி அடைகிறது. கரியமில வாயு அதிகளவில் வெளியிடப்படுகின்ற அனல்மின் நிலையம் முதலிய இடங்களில் γ-C2S கலந்த கான்கிரீட்டில் சுவர்கள், கட்டடங்கள் கட்டினால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது.

இந்த வகை கான்கிரீட் சாதாரண கான்கிரீட்டின் வலிமைக்குச் சற்றும் குறைந்ததல்ல என்பது கூடுதல் சிறப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us