தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/பக்கா உணவு மக்கானா

பக்கா உணவு மக்கானா

பக்கா உணவு மக்கானா


PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீபகாலமாக பிரபலம் ஆகிவரும் மக்கானா, உண்மையில் 3,000 ஆண்டுகளாக ஆயுர்வேத, சீன பாரம்பரிய மருத்துவத்தில் அறியப்பட்ட ஒன்றுதான். தமிழில் இதனை தாமரை விதை என்று அழைப்பர். இது தாமரை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவித அல்லியிலிருந்து பெறப்படுகிறது. ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று விளம்பரம் செய்யப்படுகிறது.

இது உண்மைதானா என்று அறிய 2012, 2018, 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் உலகின் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வில் மக்கானா, ரத்த சர்க்கரை கட்டுப்படுத்துதல், ரத்த அழுத்தத்தைச் சீராக்குதல், கொழுப்பைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு உதவும் என்று தெரியவந்தது. நீரிழிவு ஏற்பட்டிருந்த எலிகள் மீது சோதித்ததில் அவற்றின் ஈரல், சிறுநீரகம் ஆகியவற்றின் இயக்கம் சீரானது. 2019இல் எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மக்கானாவை உண்பது கெட்ட கொழுப்பைக் குறைத்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சோளத்தை எவ்வாறு பாப்கார்னாகச் சாப்பிடுகிறோமோ அதுபோல் இவை பொரித்து விற்கப்படுகின்றன. இவற்றை வறுத்து, கஞ்சி, சூப் ஆகியவற்றில் சேர்த்துக் குடிக்கலாம். பொடி செய்தும் உண்ணலாம். அல்லது பச்சையாகக் கூட பரிமாறலாம். உலகம் எங்கும் பெரியளவில் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

2030ஆம் ஆண்டு இதன் விற்பனை 9 கோடி டாலர் மதிப்புக்கு உயரும் என்கின்றனர் நிபுணர்கள். இந்தியாவில் 2023- - 2024ஆம் ஆண்டு மட்டும் 25,130 டன் மக்கானா உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.

மக்கானாவில் லுசின், ஐசோலுாசின், மெத்தியோனைன், சிஸ்டைன், அர்ஜினைன், குளுட்டமைன் உள்ளிட்ட நுண்சத்துகள் உள்ளன. இதில் உள்ள கிரியேட்டின், செல்களுக்கு ஊட்டமளிக்கிறது. 100 கிராம் மக்கானா விதைகளில் 9.7 கிராம் புரதம், 0.1 கிராம் சர்க்கரை, அத்துடன் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. பல்வேறு பலன்கள் தரக்கூடிய பக்காவான உணவு மக்கானா என்று மருத்துவர்கள் சான்றிதழ் தந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us