PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM

1. பூகம்பம் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. சூரியனின் வெப்பமும் கூட பூகம்பத்திற்கு ஒரு காரணம் என்று ஜப்பானிய புவியலாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிறுவியுள்ளனர்.
![]() |
2. பொ.யு. 79இல் இத்தாலியில் வெசுவியஸ் எரிமலை வெடித்து பாம்பெய் நகரம் அழிந்ததை நாம் வரலாற்றில் படித்திருப்போம். இந்த வெடிப்பின்போது இறந்த ஒருவரின் உடலில், அதீத வெப்பத்தால் மூளை கருப்பு நிறக் கண்ணாடியாக மாறி இருப்பதைச் சமீபத்தில் அங்கு ஆய்வுசெய்த தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
![]() |
3. ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபொராபேன் (Sulforaphane) எனும் சேர்மம் வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று சுவீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலை கண்டறிந்துள்ளது.
![]() |
4. புவி வெப்பமயமாதலால் கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். சமீபத்தில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்டோ பல்கலை, புவிவெப்பம் அதிகரிப்பதால் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தனது ஆய்வில் கூறியுள்ளது.
![]() |
5. அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை உடைய துரித உணவுகளை உண்பது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்பதை அறிவோம். சமீபத்திய ஓர் ஆய்வில் துரித உணவுகள் வயதாவதை விரைவுப்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.