PUBLISHED ON : ஏப் 25, 2024 12:00 AM

01. இரண்டு உயிரினங்கள் சேர்ந்து, புதிய உயிரினமாகப் பரிணமிப்பது கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அதிசயம். இவ்வாறு நடந்து தான் பூமியில் தாவரங்கள் உருவாயின. அந்த அதிசயம் மீண்டும் நடந்துள்ளது. சையனோ பாக்டீரியம் எனும் ஒருவகை பாக்டீரியாவை, ப்ராருடோஸ்ஃபேரா பைகெலோவி எனும் ஒரு பாசி விழுங்கி, இரண்டும் ஓருயிராக மாறியுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
![]() |
02. நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கு மிகப் பெரிய இடைஞ்சலாக இருப்பவை, நிலவில் உள்ள தூசுகள் தான். இவை எல்லா பொருட்கள் மீதும் படிந்து சேதம் விளைவிக்கின்றன. இவற்றிலிருந்து விண்கலங்களைக் காக்க, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் Electrodynamic Dust Shield எனும் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி உள்ளது.
![]() |
03. நாம் கண்களை அனிச்சையாக சிமிட்டுவது, கண்களை ஈரமாக வைத்துக் கொள்வதற்கும், தூசுகளை நீக்குவதற்கும் உதவுகிறது என்பதை அறிவோம். அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், விழித்திரையில் விழும் ஒளிகளைக் கண் சிமிட்டுதல் முறைப்படுத்துகிறது என்றும், இதன் வாயிலாக அதிகமான நேரம் ஒரு பொருளைக் கவனித்துப் பார்க்க முடிகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
![]() |
04. மிக வேகமாக நகரமயமாகி வரும் நாடு சீனா. இந்த நாட்டின் நகர ஜனத்தொகை அதிகரித்த படி உள்ளது. புவிவெப்பமயமாதல் அதைத் தொடர்ந்து உயரும் கடல் மட்டத்தால், சீனாவின் 45 சதவீத நகரப் பகுதிகள் விரைவில் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அந்த நாட்டின் புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.




