PUBLISHED ON : மே 09, 2024 12:00 AM

01. உடல் பரிசோதனை செய்வதற்கு ரத்த மாதிரிகளை எடுக்க ஊசிகளே பயன்படுகின்றன. பலருக்கு ஊசி என்றால் பயம். இதனால் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சூரிச் பல்கலை விஞ்ஞானிகள் அட்டையின் பற்கள் போன்ற நுண் ஊசிகளை உடைய கருவியை உருவாக்கி உள்ளனர். இது வலி இல்லாமல் ரத்தத்தை சரியாக உறிஞ்சும்.
![]() |
02. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அமைப்பு 280 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், அதிகமாகக் கோபப்படும் போது ரத்த நாளங்கள் தொடர்ந்து வேகமாக இயங்குவதால் அவற்றுக்குப் போதுமான ஓய்வு கிடைப்பதில்லை என்றும் இதனால் தான் இதயம் பாதிக்கப்படுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.
![]() |
03. உலகின் 15 சதவீத மின் தேவையை நீர் மின் ஆற்றல் தான் பூர்த்தி செய்கிறது. ஆனால் இதை அமைக்க அதிக இடம் தேவை. சாதாரண நீருக்குப் பதிலாக R19 தாதுப் பொடி கலந்த நீரைப் பயன்படுத்தினால் வழக்கத்தை விடக் குறைந்த இடத்திலேயே 2.5 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதை நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றனர்.
![]() |
04. சில வகை பாக்டீரியாவின் விதைகளை (ஸ்போர்ஸ்), பிளாஸ்டிக் தயாரிப்பின் போது சேர்த்தால் அவை மண்ணில் புதைந்ததும் பாக்டீரியாவின் உதவியால் எளிதில் மட்கும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
![]() |
05. உலகின் மிக உயர மான வானியல் ஆய்வு மையம், சிலி நாட்டின் ஆண்டிஸ் மலைமீது உருவாக்கப்பட்டு வந்தது. கடல் மட்டத்திலிருந்து 5,640 மீ., உயரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த மையத்தில், அகச்சிவப்பு தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோள்கள், நட்சத்திரங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்போகும் இந்த மையம் ஜப்பானிய பல்கலையால் நிறுவப்பட்டுள்ளது.