PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM

01. சீனாவில் உள்ள ஷாங்காய் ஜியோ டோங்க் மருத்துவப் பல்கலை, 23 லட்சம் ஐரோப்பியர்களின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் எதிர்பாராத விதமாக அதிகளவில் பாலாடைக்கட்டி (சீஸ்) உண்பவர்கள் முதிய வயதிலும் மன, உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கான சரியான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
![]() |
02. ஆப்ரிக்காவில் மட்டுமே வாழும் பறக்க முடியாத பறவை நெருப்புக்கோழி. சமீபத்தில் 41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக் கோழி கூடு ஒன்று, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் வதோதரா பல்கலையுடன் இணைந்து நடத்திய ஆய்வின் போது, இது கிடைத்தது. இந்தக் கூட்டில் 9 முதல் 11 நெருப்புக்கோழி முட்டைகள் இருந்த அடையாளங்களும் அப்படியே உள்ளன. இதன் வாயிலாக, தென் இந்தியாவில் நெருப்புக்கோழி இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது.
![]() |
03. துாக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்குத் தரப்படும் மருந்து டிர்செபடைட். இதை உடல் பருமன், நீரிழிவு நோயாளிகளும் பயன்படுத்தலாம் என 469 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை வெளியிட்டுள்ளது.
![]() |
04. வங்கதேசம் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் நாடு. இதனால் அங்குள்ள கட்டடக் கலைஞர் ஒருவர் மூங்கிலாலான வீடு ஒன்றை உருவாக்கி உள்ளார். இதைச் சுலபமாகக் கழற்றி, திரும்பக் கட்ட முடியும். இதனால் வெள்ளம் ஏற்படும்போது வீட்டைப் பாதுகாப்பான இடத்திற்குக் கையோடு எடுத்துச் சென்றுவிடலாம்.
![]() |
05. உடல் எடை குறைப்பிற்கும், வகை 2 நீரிழிவைச் சரி செய்வதற்கும் 5 : 2 விரத முறை உதவும் என, சீன விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 405 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில் 5 நாட்கள் உணவு உண்டு 2 நாட்கள் (அவை அடுத்தடுத்த நாட்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை) விரதம் இருக்கும் இந்த முறை நல்ல பலன் தருவது தெரிய வந்துள்ளது.