PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM

01. அமெரிக்காவைச் சேர்ந்த என்.ஐ.ஏ. பல்கலை மேற்கொண்ட ஆய்வில், கலோரிகள் குறைந்த வீகன் உணவு முதுமையைத் தள்ளிப்போடுவது தெரியவந்துள்ளது. சராசரியாக 40 வயதுடைய 21 ஜோடி இரட்டையர்களை ஆய்வில் ஈடுபடுத்தி இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
![]() |
02. அல்சைமர் நோய்க்கு முக்கிய காரணம் மூளை செல்களில் டாவ் புரதம் (Tau protein) படிவது. TTCM2 எனும் மருந்தை மூக்கின் வழியே ஸ்ப்ரேயாகச் செலுத்துவதன் வாயிலாக இந்தப் புரதத்தை அழிக்க முடியும் என்று, அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ் பல்கலை கண்டறிந்துள்ளது.
![]() |
03. சிங்கப்பூர் தேசிய பல்கலை 13,738 பேரை ஈடுபடுத்தி மேற்கொண்ட ஆய்வில்,தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட மன அழுத்தம் தொடர்பான நோய்கள் 21 சதவீதம் குறைவாகவே ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.
![]() |
04. இதய மாற்று அறுவை சிகிச்சையின் போது, இதயம் மாற்றும் நேரம் வரை சிகிச்சை பெறுபவரை உயிர் வாழ வைக்கும் செயற்கை இதயத்தைப் பொருத்தி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை செய்துள்ளனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இது முழுதும் இயந்திரமயமானது.
![]() |
05. கோள் (Planet) என்பதற்கான வரையறை விரைவில் மாற்றப்படலாம் என்று சர்வதேச விண்வெளி ஒன்றியம் (IAU) தெரிவித்துள்ளது. இப்படியாக 2006இல் மாற்றப்பட்ட போது தான் ப்ளூடோ கிரகமல்ல என்று அறிவிக்கப்பட்டது.