PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

01. பண்டைய எகிப்தியர்கள் பிரமிடுகளைக் கட்டுவதற்கு 'ஹைட்ராலிக்' துாக்கியைப் பயன்படுத்தியிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இல்லாவிட்டால், அதிக எடை கொண்ட கற்களை இவ்வளவு உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்க முடியாது என்கின்றனர்.
02. சீன விண்கலம் எடுத்து வந்த சந்திரனின் மண் மாதிரிகளில் இருந்து அங்கு கிராபின் இருப்பது கண்டறியப்பட்டது. இதை, பேட்டரி உள்ளிட்ட பல்வேறு மின்சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
03. நம் பால்வெளி மண்டலத்தில் 10 புதிய இறந்த நட்சத்திரங்களை (நியூட்ரான் நட்சத்திரங்களை) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றை ஆய்வு செய்தால், நம் பால்வெளி மண்டலம் எப்படித் தோன்றியது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
04. சில மனிதர்களுக்கு சில விதமான உணவு ஒவ்வாமை இருக்கும். ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான மக்களுக்கு நிலக்கடலை ஒவ்வாமை உள்ளது. எனவே, அந்த நாடு தேசியளவில் இந்த ஒவ்வாமை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளது.
05. சுலபத்தில்மக்காத 'பிஎப்ஏஎஸ்' பொருட்களைக் கழிவு நீரிலிருந்து நீக்க இங்கிலாந்து விஞ்ஞானிகள் '3டி பிரின்டிங்' முறையில் உருவாக்கப்பட்ட பீங்கானைப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளனர்.