PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

01. அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா உளவியல் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், இசை வாயிலாக நாம் இழந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. நினைவாற்றலை அதிகரிக்கவும் இசை உதவும் எனத் தெரியவந்துள்ளது.
![]() |
02. டென்மார்க் நாடு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத உலகின் முதல் அமோனியா தயாரிப்பு மையத்தைத் திறந்துள்ளது. இது முழுக்க முழுக்க சூரிய, காற்றாலை மின்சார ஆற்றலைக் கொண்டு இயங்கும்.
![]() |
03. கருப்பு க்ரௌஸ் (Black grouse) எனப்படும் பறவைகள் வாழ்விட இழப்பால் மிக வேகமாக அழிந்து வந்தன. இங்கிலாந்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளால் இவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.
![]() |
04. தென் அமெரிக்க நாடான சிலியின் கடற்கரையிலிருந்து 1450 கி.மீ., தொலைவில் கடலுக்கடியில் ஒரு மலையைக் கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள். 3 கி.மீ., உயரமுள்ள இந்த மலையைச் சார்ந்து குறைந்தபட்சம் 20 புதிய உயிரினங்கள் வாழும் சாத்தியம் உள்ளதாகக் கூறுகின்றனர்.
![]() |
05. குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படுகின்ற DHG கட்டிகளைச் சரிசெய்ய இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது லண்டன் புற்றுநோய் ஆய்வு மைய விஞ்ஞானிகள் மார்பகப் புற்றுநோய்க்குப் பயன்படும் ரிபோசிக்ளிப் (Ribociclib) எனும் மருந்தை இந்த நோய்க்கும் பயன்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர்.