PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

01. செல்போனிலிருந்து வரும் கதிர்களால் மூளைப் புற்றுநோய் வரும் என்று கடந்த காலத்தில் நம்பப்பட்டு வந்தது. இது குறித்து வெளிவந்த 5,000 ஆய்வுக்கட்டுரைகளைப் பரிசீலித்த ஆஸ்திரேலியாவின் ARPANSA அமைப்பு செல்போன், டிவி, ரேடியோ, வைஃபை உள்ளிட்டவற்றிலிருந்து வரும் ரேடியோ அலைகளால் மனிதர்களுக்கு எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது.
![]() |
02. போர்ச்சுகல் நாட்டில் உலகின் முதல் 'பாதி மூழ்கிய நிலையில் இருக்கும் மிதக்கும் காற்றாலைகள்' நிறுவப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு 320 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இது 25,000 வீடுகளின் ஓர் ஆண்டு பயன்பாட்டுக்குப் போதுமானதாக உள்ளது.
![]() |
03. பூமியில் எரிமலைகள் இருப்பது போலவே சந்திரனிலும் எரிமலைகள் உள்ளன. சீனா அனுப்பிய சாங்கே 5 விண்கலம் நிலவிலிருந்து எடுத்து வந்த மண்ணை ஆராய்ந்தபோது இந்த உண்மை தெரியவந்தது.
![]() |
04. இன்றைய தேதியில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவை இயங்க லித்தியம் பேட்டரி அவசியம். லித்தியம் எடுக்கும் போது இயற்கை மாசடைகிறது. இதனால் ஆர்.சி.ஈ., எனும் புது முறை ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்போர்ட் பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
![]() |
05. தங்கம் பெரும்பாலும் துகள்களாகவே கிடைக்கும். சில நேரங்களில் மட்டும் கட்டிகளாகக் கிடைக்கும். இவை பூகம்பம் ஏற்படும்போது உருவாகும் மின் தாக்கத்தால் தான் உருவாகின்றன என்று ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலை ஆய்வு தெரிவிக்கிறது.





