PUBLISHED ON : செப் 19, 2024 12:00 AM

01. பூமியைச் சுற்றி 46.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, சனிக் கோளுக்கு இருப்பது போலவே வளையம் இருந்துள்ளது என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த வளையத்தில் இருந்த கற்கள் பூமியில் விழுந்து பல பள்ளங்களை உருவாக்கி இருப்பதாகவும் கூறுகின்றனர்.
![]() |
02. ஆஸ்திரேலிய கண்டத்தின் தென்பகுதியில் 12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர்களின் காலடித்தடம் கண்டறியப்பட்டுள்ளது. இவை ஊன் உண்ணும் வகையைச் சேர்ந்தவை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
![]() |
03. ஜப்பானில் இதுவரை அறியப்படாத புதிய இனத்தைச் சேர்ந்த நட்சத்திர மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த நீளம் வெறும் 10 செ.மீ. தான். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதபடியான இந்த புதுகண்டுபிடிப்பு உயிரியல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
![]() |
04. நமது பூமியிலிருந்து 180 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஆர் டோராடஸ் (R Doradus) எனும் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இறந்து கொண்டிருக்கும் நட்சத்திரமான இது நமது சூரியனை விட 350 மடங்கு பெரிதாகி உள்ளது.
![]() |
05. நமது உடலை நோய்கள் தாக்காமல் காக்கும் தன்மை உடையவை 'டி' செல்கள். இவற்றை நேரடியாக முறிந்த எலும்புகள், சிதைந்த தசைகள் மீது செலுத்தினால் அவற்றைக் குணப்படுத்தும் என்று ஜப்பானைச் சேர்ந்த ஒசாகா பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.