PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM

01. மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்று எலும்புப் புற்றுநோய். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆஸ்டன் பல்கலை இதை சரிசெய்ய உலோகத் தாதுக்கள் கலந்த கண்ணாடியைப் பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளது.
![]() |
02. வயதாவதால் ஏற்படும் டிமென்ஷியா எனும் நினைவாற்றல் குறைபாடு, உலகம் முழுவதும் பெருகி வருகிறது. ஃப்ளேவனாய்ட்ஸ் எனப்படும் சேர்மங்கள் நிறைந்த டீ, டார்க் சாக்லெட், பெர்ரி ஆகியவற்றை உட்கொள்வதால் இந்த நோய் குறையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
![]() |
03. மனித எலும்பின் அமைப்பை ஆராய்ந்து அதைப் போலவே உள்ளே குறிப்பிட்ட வடிவில் வெற்றிடமுள்ள கான்கிரீட்டைக் கட்டடப் பொறியியலாளர்கள் உருவாக்கி உள்ளனர். இது வழக்கமான கான்கிரீட்டை விட 5 மடங்கு வலிமையாக உள்ளது.
![]() |
04. நீர் அனோல் என்றழைக்கப்படும் ஒரு வகை பல்லி மத்திய அமெரிக்காவில் வாழ்கின்றன. இவற்றுக்கு ஆபத்து வரும்போதும் உணவு தேடும்போதும் தங்கள் மூக்கின் மீது நீர்க்குமிழியை உருவாக்கிக் கொண்டு நீருக்கடியில் 20 நிமிடங்கள் இருக்கின்றன. இவற்றைத் தற்போதுதான் அங்குள்ள உயிரியலாளர்கள் கண்டு ஆவணப்படுத்தி உள்ளனர்.
![]() |
05. அவ்வப்போது நமது பூமியை நோக்கி ஆபத்தான விண்கற்கள் வருவதுண்டு. அவற்றின் திசையை மாற்றி நம்மைக் காத்துக் கொள்ள எக்ஸ்-ரே கதிர்கள் உதவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.





