தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. மலைப்பாம்புகள் மிகப்பெரிய உயிரினங்களைக் கூட அப்படியே விழுங்கிவிடும் என்பதை நாம் அறிவோம். பர்மிய மலைப்பாம்பு ஒன்று சமீபத்தில் 54 கிலோ எடை உள்ள ஒரு மானை விழுங்குவது வீடியோவாகப் பதிவாகியுள்ளது. இவ்வளவு பெரிய விலங்கையும் கூட மலைப்பாம்பினால் விழுங்க முடியும் என்பது இப்போது தான் தெரியவந்துள்ளது.

2. அணுக்கழிவை மறுசுழற்சி செய்கின்ற அமெரிக்க நிறுவனம் ஓக்லோ. இது சிறிய ரக அணுமின் நிலையங்களை உருவாக்கி வருகிறது. இதில் கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு 1,000 வீடுகளின் மின் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.

3. சீனாவில் ஒவிராப்டோரோசாரியன் இனத்தைச் சேர்ந்த டைனோசரின் தொல்லெச்சத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை 11 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறுகின்றனர்.

4. ஆஸ்திரேலிய நகரமான மெல்போர்னின் குகை ஒன்றில் புதிய சில்வண்டு இனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அரை அங்குல அளவுள்ள இது, பழுப்பு நிற உடலும், கருப்பு நிறக் கண்களும் கொண்டுள்ளது.

5. சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் உள்ள சில தாதுப் படிமங்களைக் கொண்டு, 35 கோடி ஆண்டுகளுக்கு முன், அங்கு கடல் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us