PUBLISHED ON : நவ 28, 2024 12:00 AM

01. கியூபா நாட்டின் மழைக்காடுகளில் ஒரு புதிய இனத்தைச் சேர்ந்த தேளை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு டிட்யாப்சிஸ் ரொலண்டாய் (Tityopsis rolandoi) என்ற அறிவியல் பெயர் வைத்துள்ளனர். 1 அங்குல நீளம் மட்டுமே இது வளரும். இதற்கு எட்டு கண்கள் உண்டு. இந்த இனத்தில் ஆண் தேளை விடப் பெண் தேள் பெரிதாக இருக்கும்.
![]() |
02. ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால், அமெரிக்கா தனது வரலாற்றில் முதன்முறையாக இவற்றை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.
![]() |
03. அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் 12,800 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வால் நட்சத்திரத்தின் சிறு பகுதி விழுந்து உள்ளது. இதனால் பூமியில் வெப்பநிலை அதிகரித்துப் பல உயிர்கள் அழிந்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
![]() |
04. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மோனாஷ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தினமும் சிறிதளவு பாதாம், முந்திரி, வேர்க்கடலை முதலிய பருப்பு வகைகளை உட்கொண்டால் இதய நோய், ஞாபகமறதி, புற்றுநோய் உடல் பருமன், நீரிழிவு ஆகிய நோய்கள் வராமல் காக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
![]() |
05. சீனாவைச் சேர்ந்த எஸ்.யு.எஸ்.டி., பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இரவு நேரம் செயற்கை வெளிச்சத்தில் இருப்பதற்கும் தூக்கமின்மைக்குமான தொடர்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதிகமான செயற்கை வெளிச்சம் பயன்படுத்தப்படுகின்ற நகரங்களில் தான் தூக்கமின்மையால் அவதிப்படும் நோயாளிகளும் அதிகம் உள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.