PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

01.ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கரோலின்ஸ்கா மையம் ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டது. இதில், பொதுவாக இதய நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளை ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எடுத்துக் கொண்டால், 'டிமென்ஷியா' முதலிய மூளை தொடர்பான நோய்கள் வரலாம் என்று தெரிய வந்துள்ளது.
![]() |
02. ஒளியில் உள்ள நுண்துகள் போட்டான். இதை நிழற்படம் எடுப்பது மிகவும் கடினம். முதல்முறையாக இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பல்கலை விஞ்ஞானிகள் படம் எடுத்துள்ளனர்.
![]() |
03. பூமியிலிருந்து 1,60,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது WOH G64 எனும் ராட்சத சிவப்பு நட்சத்திரம். இது அழிந்து வருகிறது. விஞ்ஞானிகள் முதன்முறையாக இதை, ஐரோப்பிய ஆய்வு மையத்தின் VLTI தொலைநோக்கி மூலம் படம் எடுத்துள்ளனர்.
![]() |
04. ஸ்டார்ச், தண்ணீர் இரண்டையும் கொண்டு, நம் முடியை விட 200 மடங்கு அடர்த்தி குறைந்த நாரை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதை, காயங்களை ஆற்றும் பேண்டேஜ் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களில் பயன்படுத்த முடியும்.
![]() |
05. நிக்கல் வினையூக்கிகளை பயன்படுத்தி கரியமில வாயுவை மீத்தேனாக மாற்றும் முறையை, அமெரிக்காவைச் சேர்ந்த ஓஹியோ பல்கலை விஞ்ஞானி உருவாக்கி உள்ளார்.