PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM

01. அமெரிக்காவைச் சேர்ந்த சான்பிரான்சிஸ்கோ பல்கலை ஆராய்ச்சியாளர்கள், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சிறுநீரக கற்கள், ஒற்றைத் தலைவலி, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், குறைந்த ரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தடுக்க உதவும் என்று தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
![]() |
02. தலை, கழுத்தில் ஏற்படும் புற்றுநோய்களைக் குணப்படுத்தக் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பாலிவினைல் அல்கஹால் (Polyvinyl alcohol) எனும் வேதிப் பொருளை இணைத்துப் பயன்படுத்தினால் சிகிச்சையின் திறன் அதிகரிப்பதாக ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோ பல்கலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
![]() |
03. இங்கிலாந்தைச் சேர்ந்த பர்மிங்காம் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், வாணலியில் பொரிப்பதை விட, ஏர் ஃப்ரையர் பயன்படுத்திப் பொரிப்பதால் வீட்டுக்குள் ஏற்படும் மாசு குறைவதாகத் தெரியவந்துள்ளது.
![]() |
04. வயதாகும்போது ஏற்படும் மறதிநோயான அல்சைமருக்கும், வயிறு உள்ளிட்ட உறுப்புகளில் தேங்கும் உள்ளுறுப்பு கொழுப்புக்கும் (Visceral fat) உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இளவயதில் வயிற்றில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்வது பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும் என்று கூறுகின்றனர்.
![]() |
05. இந்த டிசம்பர் மாதம் வானில் கோள்களில் அணிவகுப்பை வெறும் கண்களால் காணலாம். இந்த மாதம் முழுதுமே மாலையில் வெள்ளிக் கோள் தென்மேற்கு வானில் பிரகாசிக்கும். டிசம்பர் 14 அன்று மாலை வானத்தில் முழு நிலவுக்கும், பிரகாசமான ரோகிணி நட்சத்திரத்துக்கும் இடையில் வியாழனைக் காணலாம்.





