sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

அறிவியல் துளிகள்

/

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

01. ஓர் உணவை உண்டவுடன் அது எவ்வளவு வேகமாக ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்பது தான் அந்த உணவின் க்ளைசிமிக் குறியீடு (Glycemic index). இப்போது பயன்பாட்டில் உள்ள அரிசியில் இது அதிகம். அதனால் தான் அரிசி உணவு அதிகம் உண்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. குறைவான க்ளைசிமிக் குறியீடு உள்ள அரிசி வகைகளை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Image 1364218


02. இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்ட 26,000 வெள்ளைக் குள்ள நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இவற்றுக்கிடையே காணப்படும் வேறுபாடுகள் பற்றிப் படிப்பது, பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் புரிந்து கொள்ள உதவும் என்று தெரிவித்துள்ளனர்.

Image 1364219


03. காமன் முர்ரே (Common murrey) என்பவை பார்ப்பதற்கு பென்குவின் போல் இருக்கும் கடல் பறவைகள். கடல் வெப்ப அலை காரணமாக அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் மட்டும் கடந்தாண்டு இந்த இனத்தைச் சேர்ந்த 40 லட்சம் பறவைகள் இறந்துள்ளன. இதைப் பாதுகாக்காமல் இருந்தால், மொத்த இனமே அழியக் கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Image 1364220


04. சீனாவில் சமீபத்தில் 19.3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் தொல்லெச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆர்க்கியோகர்சர் ஆசியாடிகஸ் (Archaeocursor asiaticus) என்று பெயரிடப்பட்டுள்ளது. 1 மீ. உயரம் மட்டும் வளரும் இது, தாவர உண்ணி வகையைச் சேர்ந்தது.

Image 1364221


05. சிறுத்தைகளின் (Leopard) எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்காவில், ஒவ்வொரு சிறுத்தையும் கண்காணிக்கப்படுகிறது. அப்போது, மனிதர்களுக்கு உள்ளது போலவே ஒவ்வொரு சிறுத்தைக்கும் பிரத்யேகக் குரல் இருப்பது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us