PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

01. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டெல் அவிவ் பல்கலை ஆய்வாளர்கள் அந்த நாட்டில் உள்ள டிம்னா பள்ளத்தாக்கில் பொ.யு.மூ., 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த தாமிர ஆலை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அங்கு தாமிரம் உருவாக்கப்பட்டபோது குறைவான சுற்றுச்சூழல் மாசுபாடு தான் ஏற்பட்டுள்ளதாம்.
![]() |
02. திமிங்கிலச் சுறாக்கள் உலகின் மிகப் பெரிய விலங்குகளில் ஒன்று. 60 அடி நீளம் வளரும். சமீபத்தில் மெக்சிகோ நாட்டின் கடற்கரையை ஒட்டி இவற்றை ஓர்கா திமிங்கிலங்கள் வேட்டையாடுவதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர். திமிங்கிலச் சுறாக்களை விட அளவில் சிறிய (26 அடி நீளம் மட்டுமே வளரும்) ஓர்கா கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடுகின்றன.
![]() |
03. உரம் உள்ளிட்ட பல பொருட்களில் முக்கிய சேர்மானம் அமோனியா. வேண்டிய இடத்தில் காற்றிலிருந்து அறை வெப்பநிலையிலேயே அமோனியாவை உருவாக்கும் கருவியை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை உருவாக்கி உள்ளது.
![]() |
04. இங்கிலாந்து நாட்டில் 16.6 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர்களின் காலடித் தடங்களைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். டைனோசர் பற்றிய மர்மங்களுக்கு இது விடை தரலாம்.
![]() |
05. பூமியில் மட்டுமின்றி செவ்வாய் கிரகத்திலும் எரிமலைகள் உள்ளன. அவற்றில் வெளியான சாம்பலை ஆராய்ந்தால், செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.





