sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : ஜன 04, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

01. ஆர்டிக் பகுதிகளில் வாழும் ரெய்ன் டீர் (Rein deer) மான்கள், குறுகிய காலமே நீடிக்கும் கோடைக் காலத்தில், ஒரு நாளின் பெரும்பாலான நேரம், அதிகளவிலான உணவை விரைவாக விழுங்குகின்றன. பின் ஓய்வு நேரத்தில் துாங்கியபடியே அசை போடுகின்றன. இந்த வினோத பழக்கம் இவற்றுக்கு இருப்பது, சமீபத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சூரிச் பல்கலை விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

02. சுவீடன் நாட்டில், முழுதும் மரத்தாலான காற்றாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 150 மீட்டர் உயரமுடைய இது, 400 வீடுகளுக்கு தேவையான 2 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

03. புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, புற்று நோய் வரும் என்பதை அறிவோம். ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று, புகையால் நினைவாற்றல் தொடர்பான அல்சைமர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

04. பேரிடர் காலத்தில், கட்டட இடிபாடுகள் இடையே சிக்கியவர்களை மீட்க ட்ரோன்கள் உதவும். சில நேரங்களில் புகை, துாசிகள் இருந்தால், ட்ரோன் கேமரா மூலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய இயலாது. இதனால், அவர்களை ஒலியை கொண்டு கண்டறியும் லுாசி (LUCY) எனும் ஒலி அமைப்புடன் கூடிய ட்ரோனை ஜெர்மானிய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

05. சீனாவின் சன் யாட் சென் பல்கலை ஆய்வாளர்கள், தனியாக வாழும் முதியோர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பை, செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம் குறைக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us