PUBLISHED ON : ஜன 18, 2024 12:00 AM

01. சுற்றுச்சூழலில் உள்ள அதிக அளவிலான கரியமில வாயு, புவிவெப்பமயமாதலை அதிகரிக்கிறது. இதைத் தடுக்க, கரியமில வாயுவை சில மின் வேதியியல் முறைகளை பின்பற்றி கார்பன் நானோ நார்களாக மாற்றலாம் என, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைகண்டறிந்துள்ளது.
02. பூமியிலிருந்து 160 ஒளியாண்டுகள் துாரத்தில் உள்ளது வாஸ்ப் 69பி (WASP
69b) கோள். இதற்கு வால் நட்சத்திரங்களுக்கு இருப்பது போல் ஹீலியம்
துகள்களாலான நீண்ட வால் இருப்பதை ஏற்கனவே அறிவியலாளர்கள் அறிந்திருந்தனர்.
ஆனால், அந்த வாலின் மொத்த நீளம் 5,63,270 கி.மீட்டர் என்பதை தற்போது
கண்டறிந்துள்ளனர்.
03. கொரோனா பெருந்தொற்று இப்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; என்றாலும் கூட, சில இடங்களில் உருமாறிய நிலையில் வைரஸ் பரவிக் கொண்டுள்ளது. இதைத் தடுக்க தடுப்பூசிகளை விட, மூக்கின் வழியே எடுத்துக் கொள்ளப்படும் தடுப்பு மருந்து அதிக பலன் தரும் என, சிங்கப்பூரைச் சேர்ந்த டியூக் மருத்துவ மையம் கண்டறிந்துள்ளது.
04. ஆடோபேஜி என்பது வேதியியல் முறையிலான புற்றுநோய் சிகிச்சைக்கு துணையாகப் பயன்படும் ஒரு நவீன சிகிச்சை முறை. இந்த சிகிச்சையின் பலனை அதிகரிக்க, கார்பன் மோனாக்ஸைடாலான நுரைகளை பயன்படுத்துவது நல்ல பலனை தரும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
![]() |
05. அமெரிக்காவின் நாசா அனுப்பிய டெஸ் (TESS) விண்கலம், பூமி அளவுள்ள ஒரு
கோளை கண்டறிந்துள்ளது. இது, தன்னுடைய சூரியனான HD 63433 எனும்
நட்சத்திரத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கோளில் ஓராண்டு என்பது
வெறும் 4.2 நாட்கள் தான். இதில் ஆச்சரியமான தகவல் என்ன வென்றால், இதனுடைய
பாதி பரப்பளவு எரிமலை குழம்புகளால் ஆனது என்பது தான்.