sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

அறிவியல் துளிகள்

/

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : பிப் 01, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 01, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

01. இங்கிலாந்தைச் சேர்ந்த நார்த்தும்ரியா பல்கலை, கண்களில் ஏற்படும் ரத்த அழுத்த மாறுபாடுகளைக் கண்டறிந்து மருத்துவர்களுக்குத் தகவல் அனுப்பும் நவீன கண் கான்டாக்ட் லென்ஸ்களை வடிவமைத்துள்ளது. இதன் வாயிலாக, நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும் கண்நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும்.

02. நோய்களை உருவாக்கிய சில வகை பாக்டீரியாக்கள், மருந்து செலுத்தும் போது மட்டும் தன் இனப்பெருக்கத்தை நிறுத்தி, செயல் இழந்துவிடும். பின்பு மருந்தின் தன்மை குறைந்ததும் செயல்படத் துவங்கிவிடும். இதனால் அவற்றைக் கொல்ல பாரைட் (Paride) என்று பெயரிடப்பட்டுள்ள சில வகை வைரஸ்களைப் பயன்படுத்த முடியும் என்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சூரிச் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

03. சீனாவின் பீடா வோல்ட் என்கின்ற நிறுவனம் வைர குறை மின்கடத்தி, கதிரியக்க நிக்கல் ஐசோடோப் ஆகியவற்றைக் கொண்டு ஒரு புது பாட்டரியை வடிவமைத்துள்ளது. இது சாதனங்களை 50 ஆண்டுகள் தொடர்ந்து இயக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

Image 1226426


04. பால் குடிப்பதற்கும் டைப் 2 நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்பு பற்றி நீண்டகால ஆய்வுகள் நடந்து வந்தன. தற்போதைய புதிய ஆய்வில், 'லாக்டோஸ் இன்டாலரன்ஸ்' எனப்படும் பால் பொருள் ஒவ்வாமை உள்ளவர்கள் தினமும் பாலை அருந்துவதன் வாயிலாக நீரிழிவு வராமல் தப்பிக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

05. 'மைக்கோபாக்டீரியம் அல்சரேனஸ்' எனும் பாக்டீரியாவால் உருவாகும் புருளி அல்சர் (Buruli ulcer) நோய், தோல், தசைகளை அரித்துவிடும். இது எப்படிப் பரவுகிறது என்ற விஷயம் 80 ஆண்டுகாலமாக மர்மமாகவே இருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலை, கொசு மூலமே இந்த பாக்டீரியா பரவுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.






      Dinamalar
      Follow us