PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

1. அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை மேற்கொண்ட ஆய்வில், அதிகமான முறை சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
![]() |
2. துாக்கமின்மை, மன அழுத்தத்திற்கான மருந்துகளைத் தயாரிக்கும்போது, பென்சோடியாசெபின் எனும் வேதிப் பொருள் கழிவாகிறது. இது நீர் நிலைகளில் கலப்பதால், சாலமன் மீன்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன என்று ஆஸ்திரேலியாவின் க்ரிஃபித் பல்கலை தெரிவித்துள்ளது.
![]() |
3. விழுகிற ஒவ்வொரு மழைத்துளியிலிருந்தும் மின்சாரத்தை அறுவடை செய்யும் ஒரு புதிய நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சிறிய பிளாஸ்டிக் குழாய்களின் வலைப் பின்னல் மற்றும் மின்கடத்திகள் போன்ற எளிய அமைப்பைப் பயன்படுத்தி, மழைநீரிலிருந்து ஒரு டஜன் எல்.இ.டி., விளக்குகளை எரிய வைக்கும் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் செய்து காட்டியுள்ளனர்.
![]() |
4. டால்பின்கள் எழுப்பும் ஒலியைக் கொண்டு, அவை என்ன சொல்ல வருகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும்படியான ஒரு செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியை, விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதற்கு 'டால்பின் கெம்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
![]() |
5. பல்வேறு வடிவங்களில், பறக்கும் ரோபோக்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவை தரையிறங்கும் போது சிரமப்படுகின்றன. இதைச் சரி செய்ய அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலை ஆய்வாளர்கள் 'க்ரேன் ப்ளை' எனும் ஒருவிதமான பூச்சியின் கால்களைப் போல் ரோபோவின் கால்களை வடிவமைத்துள்ளனர்.





