sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

அறிவியல் துளிகள்

/

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. சிறுநீரகங்களில் இயற்கையாக உற்பத்தியாகும் ஒரு சத்து 'பெடைன். பீட்ரூட்டிலும், கீரைகளிலும் உள்ள இதை, வயதான எலிகளுக்குக் கொடுத்தபோது, அவற்றின் உடலில், உடற்பயிற்சிக்கு இணையான பலன் கிடைப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பெடைன் சத்து உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, செல்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

2. இதுவரை பூமியில் 77,000 விண்கற்கள் விழுந்துள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவை வெறும் 400 கற்கள் தான். அவற்றுள் பெரியது, 2023ம் ஆண்டு சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட 'NWA 16788' விண்கல். இது வரும் ஜூலை 16ம் தேதி ஏலத்திற்கு வருகிறது.

3. ஆஸ்திரேலியாவில் உள்ள கொடுக்கில்லாத் தேனீக்களின் தேனை அந்த நாட்டின் பூர்வகுடிகள் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலை மேற்கொண்ட ஆய்வில், இந்தத் தேனில் கிருமிநாசினித் தன்மை இருப்பது தெரியவந்துள்ளது.

4. நம் பால்வெளி மண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் கேலக்ஸிகளில் ஒன்று, ஆண்ட்ரோமெடா. சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள், பல்வேறு தொலைநோக்கிகளின் உதவியுடன் இதன் முழு உருவைப் படமெடுத்துள்ளனர். இந்தப்படம் தற்போது அறிவியல் ஆர்வலர்களிடையே வைரலாகி வருகிறது.

5. இத்தாலியின் டுரின் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளின் ரீங்காரம் அருகில் கேட்டவுடன், அவற்றைத் தங்களை நோக்கி ஈர்ப்பதற்கு தாவரங்கள் பூந்தேன் உற்பத்தியை அதிகப்படுத்துவது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us