PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

1. பூமியிலிருந்து மிக தொலைவில் அமைந்திருக்கும் கருந்துளையை, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'லிட்டில் ரெட் டாட்' என்று அழைக்கப்படும் கேலக்ஸியில், அடர்த்தியான சிவப்பு மேகங்கள் சூழ்ந்த நிலையில் இந்தக் கருந்துளை உள்ளது.
![]() |
2. தண்ணீரில் மூழ்காமல் நடக்கும் பூச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை முன்மாதிரியாக கொண்டு நீரில் நடக்கும் ரோபோ ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 8 செ.மீ., நீளமும், 10 செ.மீ., அகலமும், 1.5 செ.மீ., உயரமும் கொண்ட இந்த ரோபோவுக்கு, 'ரகோபோட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
![]() |
3. அதிகமான மரங்களை நடுவது பூமிக்கு நல்லது. அமெரிக்காவைச் சேர்ந்த ரிவர்சைட் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், பூமியின் மற்ற பகுதிகளில் மரம் நடுவதை விட, வெப்ப மண்டல பகுதிகளில் மரம் நடுவதே மிக நல்ல பலன்களை தரும் என்று தெரிய வந்துள்ளது.
![]() |
4. நம் உடல் செல்களில் உள்ள குரோமோசோம்களில், 'டெலமீர்ஸ்' எனும் பாதுகாப்பு கவசம் இருக்கும். வயதாகும் போது இவை சிதைவதால் பல நோய்கள் உருவாகின்றன. டெலமீர்ஸை காக்கும் ஆற்றல், 'வைட்டமின் டி' சத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
![]() |
5. பீட்ரூட் சாறு குடிப்பதால் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் துாண்டப்பட்டு ரத்த அழுத்தம் குறையும் என்று, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எக்ஸிடர் பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.