PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM

1. அமெரிக்காவில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலை 33,000 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், பி3 வைட்டமினை எடுத்துக்கொள்வதன் வாயிலாக, தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 54 சதவீதம் குறைவதாக தெரியவந்துள்ளது.
![]() |
2. ஆப்ரிக்காவின் மொராக்கோ, அல்ஜீரியா ஆகிய நாடுகளில் வாழும் ஒரு வகை பட்டாம்பூச்சி 'அட்லஸ் ப்ளூ' பட்டாம்பூச்சி. சமீபத்திய ஆய்வில் பல்செல் உயிரிகளிலேயே மிக அதிகமான க்ரோமோசோம்கள் உடையது இந்தப் பட்டாம்பூச்சி தான் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் செல்களில் மொத்தம் 229 ஜோடி க்ரோமோசோம்கள் உள்ளன.
![]() |
3. ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் 80,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நியாண்டர்தால் மனிதர்களின் கால் தடத்தைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதை மேலும் ஆராய்ந்தால் இவர்களின் இடப்பெயர்ச்சி பற்றி அறிந்து கொள்ள முடியும்.
![]() |
4. மெகாராப்டோரான் இனத்தைச் சேர்ந்த புதிய டைனோசர் ஒன்றின் தொல்லெச்சம் அர்ஜென்டினா நாட்டில் கிடைத்துள்ளது. இது 7 கோடி ஆண்டுகள் பழையது. இது 23 அடி நீள உடலைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
![]() |
5. 'மேக்மேக்' என்பது நெப்டியூனுக்கு அப்பால் இருக்கும் மிகப் பெரிய கோள்களுள் ஒன்று. இங்கு மீத்தேன் இருப்பதாகத் தனது சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.