PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

1. சுண்ணாம் பு சத்து (கால்சியம்) மாத்திரைகளை தொடர்ந்து உண்பதால் ஞாபக மறதி நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக முந்தைய ஆய்வுகள் தெரிவித்தன. இந்நிலையில், வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய பல்கலை மேற்கொண்ட புதிய ஆய்வில், கால்சியம் மாத்திரைகளுக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்துள் ளது.
![]() |
2. ராட்ப வுட் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், பீர் குடிக்காதவர்களை விட குடிப்பவர்களை நோக்கி கொசுக்கள் 35 சதவீதம் அதிகம் ஈர்க்கப்படுவது தெரியவந்து ள்ளது.
![]() |
3. சீனாவின் 'சாங்இ6' விண்கலம் நிலவில் இருந்து பாறை மாதிரிகளை எடுத்து வந்தது. அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள், பூமியை நோக்கி இருக்கும் நிலவுப் பகுதி கவசத்தின் (Moon'near side mantle) வெப்பநிலையை விட, பூமியை நோக்காமல் இருக்கும் நிலவுப் பகுதி (far side) கவசத்தின் வெப்பநிலை 100 டிகிரி குறைவாக இ ருப்பதாக தெரிவித்துள்ளனர்.
![]() |
4. ஆஸ்திரேலியா வின் ஆர்.எம்.ஐ.டி., பல்கலை மேற்கொண்ட ஆய்வில், மனித உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா விண்வெளி பயணத்தால் பாதிக்கப்படாது என்பது தெரிய வந்துள்ளது. எனவே, மனிதர்களை விண்வெளிக்கு எந்த பயமுமின்றி அனுப்பலாம்.
![]() |
5. சனியின் நி லவான என்சலடஸில்பனில் கடல் உள்ளது. இதில் இருந்து வெளியேறும் வாயுக்களில் அல்கீன், நைட்ரஜன், ஆக்சிஜன் மூலக்கூறுகள் இருப்பதை, நாசாவின் காசினி விண்கலம் கண்டறிந்து உள்ளது.