PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM

1. சிங்கப்பூர் தேசியப் பல்கலை ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய குயில் இனத்தை போர்னியோ தீவில் கண்டறிந்துள்ளனர். இதற்கு ஹையரோகாகைஸ் திகானடா என்று அறிவியல் பெயர் தந்துள்ளனர்.
![]() |
2. பூமியில் இருந்து 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது V883 ஒரியானிஸ் நட்சத்திரம். இதைச் சுற்றி இருக்கும் வளையத்தில் தண்ணீர் இருப்பதை அடகாமா பாலைவனத்தில் உள்ள தொலைநோக்கி உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
![]() |
3. கிரீன்லாந்து தீவின் பனிப் படலம் உருகி வருவதால் பனிப்பாறை களால் ஏற்படும் அழுத்தம் குறைந்து மொத்த தீவும் வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து வருவதாகப் புவியியலாளர்கள் கூறுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 2 செ.மீ. அளவு இந்தத் தீவு நகர்ந்துள்ளது.
![]() |
4. அர்ஜென்டினா நாட்டின் வட மேற்குப் பகுதியில் முற்றிலும் வித்தியாசமான ஒரு டைனோசரின் முழு எலும்புக்கூடு தொல்லெச்சமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது, நீண்ட கழுத்து கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
![]() |
5. தென்மேற்கு ஜெர்மனியில் 31,000 ஆண்டு களுக்கு முன்பிலிருந்தே நீர்யானைகள் வாழ்ந்து வந்ததாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் பகுதியில் நீர்யானையின் 19 தொல்லெச்சங்கள் கிடைத்துள்ளன.