PUBLISHED ON : டிச 25, 2025 07:40 AM

1. தன்னை வேட்டையாட வரும் உயிரினங்களை ஏமாற்ற, சில சிலந்திகள் தங்கள் வலையில் குப்பையைக் கொண்டு தங்களைப் போன்றே 'போலி உருவங்களை' உருவாக்குகின்றன. இந்த புத்திசாலித்தனமான தந்திரம், எதிரிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க சிலந்திக்கு உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
![]() |
2. முடியின் வேர்ப் பகுதியிலுள்ள டி.என்.ஏ., சிதைந்தாலும், முடியிலுள்ள புரதங்களை (Proteomic Genotyping) ஆராய்ந்து குற்றவாளிகளை அடையாளம் காணும் புதிய முறையை அமெரிக்க தேசிய ஆய்வக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது, முற்றுப் பெறாமல் இருக்கும் பல பழைய வழக்குகளுக்கு உயிர் கொடுக்கும்.
![]() |
3. பழம் பழுத்துவிட்டதா என அறிய, இனி பழத்தை அழுத்திப் பார்த்து சேதப்படுத்த வேண்டியதில்லை. ஸ்பெயினிலுள்ள விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ள ஒரு கையடக்கக் கருவி மூலம், பழத்திற்கு அருகே உள்ள இலையை 'ஸ்கேன்' செய்தாலே போதும். இலைகளில் ஒளிச்சேர்க்கையில் நிகழும் மாற்றங்களை வைத்தே பழத்தின் கனிந்த நிலையைத் துல்லியமாகக் கண்டறியலாம்.
![]() |
4. 'ஹெப்பாடிடிஸ் சி' வைரஸ் பாதிப்பை, குறைந்த செலவில் சில நிமிடங்களிலேயே துல்லியமாக கண்டறிய உதவும் புதிய கருவி வந்துள்ளது. இதை, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை உருவாக்கியுள்ளது. ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடி சிகிச்சையை துவங்கலாம்.
![]() |
5. மரத் தவளைகள், தேரைகள் போன்ற சில ஊர்வனவற்றின் குடலில் வாழும் சில நுண்ணுயிரிகள், புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டிருப்பதை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.





