தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!


PUBLISHED ON : பிப் 05, 2026 07:35 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2026 07:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலை விஞ்ஞானிகள் அதிநவீன செமிகண்டக்டர் சில்லுகளை நுாலிழைகளுக்குள் புகுத்தி 'ஸ்மார்ட் இழைகளை' உருவாக்கியுள்ளனர். இவற்றை சாதாரண ஆடை களில் வைத்து நெய்ய முடியும். இதை அணிபவரின் உடல் நலத் தரவுகளை இழைகள் சேகரிக்கும்.

Image 1531693


2. லண்டன் இ ம்பீரியல் கல்லுாரி பொறியாளர்கள் 200 டிகிரி சென்டி கிரேடு வெப்பத்திலும் உருகாத தீயணைப்பு டிரோன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஏரோஜெல் கவசத்தால் பாதுகாக்கப்பட்ட இந்த டிரோன், எரியும் கட்டடங்களுக்குள் புகுந்து மனித உயிர்களைக் காக்க உதவும். தீயணைப்பு வீரர்களின் உயிருக்கு ஆபத்தில்லாமல் தகவல்களைத் திரட் டவும் உதவும்.

Image 1531694


3. வெர்வ் தெர பியூட்டிக்சின் ஆய்வாளர்கள், 'கிரிஸ்பர்' தொழில்நுட்பம் வாயிலாக, ஒருமுறை செய்யப்படும் சிகிச்சையிலேயே, கொலஸ்ட்ராலை நிரந்தரமாகக் குறைக்க வழிவகுத்துள்ளனர். 'பி.சி.எஸ்.கே.9' என்ற மரபணுவை மாற்றியமைக்கும் இந்த முறை, இதய நோயாளிகள் வாழ்நாள் முழுதும் மாத்திரை சாப்பிடும் அவசியத்தை நீக்கும்.

Image 1531695


4. குயின்ஸ்லாந்து பல்கலை ஆய்வாளர்கள், மர வளையங்களை கார்பன்--14 சோதனை செய்து, ஆதிகாலத்தில் எப்போதெல்லாம் சூரியப் புயல்கள் வீசின என்பதை கண்டறிந்துள்ளனர். கார்போ ஹைட்ரேட் படிமங்களால் ஏற்படும் காலதாமதத்தைச் சீரமைப்பதன் வாயிலாக, வரலாற்றின் மிக மோசமான சூரியச் சீற்றங்களை துல்லியமாகப் பட்டியலிட்டுள்ளனர்.

Image 1531696


5. ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வாளர்கள், ஏ.ஐ.,யின் உதவியுடன், சிங்கங்கள் பயன்படுத்தும் இரண்டாம் வகை ரகசியக் கர்ஜனையைக் கண்டறிந்துள்ளனர். மனிதக் காதுகளுக்குப் புலப்படாத இச்சத்தங்கள், சிங்கங்களின் சமூகக் கட்டமைப்பு மற்றும் ஆரோக்கியத்தை துாரத்திலிருந்தே துல்லியமாகக் கண்காணிக்க வனக்காப்பாளர்களுக்கு உதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us