தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!


PUBLISHED ON : மார் 05, 2026 07:25 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2026 07:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. கிரீன்லாந்தின் பனிப் பாறைகளுக்கு அடியில், வெப்பச் சலனம் நடப்பதை ரேடார் ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. புவியின் ஆழத்தில் கற்பாறை களுக்கு அடியில் உள்ள 'மேக்மா' குழம்புகளைப் போலவே, பனி அடுக்குகளுக்குள் ஏற்படும் இந்த விசித்திரமான நிகழ்வு, பனிப் பாறைகளின் கட்டமைப்பு பற்றிய அறிவியல் கணிப்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

Image 1544719


2. லண்டன் கிங்ஸ் கல்லுாரி ஆய்வாளர்கள், அரிய புவித் தாதுக்களுக்கு மாற்றாகப் பயன்படக்கூடிய புதிய வகை அலுமினிய மூலக் கூறைக் கண்டறிந்துள்ளனர். முக்கோண வடிவிலான அலுமினியத் திரள்களைக் கொண்ட இது, மிகக் கடினமான வேதிப் பிணைப்புகளையும் உடைக்கும் திறன் கொண்டது. இது, மின்னணு சாதன உற்பத்தி செலவைக் குறைக்கும்.

Image 1544720


3. வாயிலுள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களை அழிக்காமல், ஈறு நோயை உண்டாக்கும் கிருமிகளை மட்டும் குறிவைத்து அழிக்கும் புதிய பற்பசை ஜெல் உருவாக்கப் பட்டுள்ளது. இது வாயில் வசிக்கும் நுண்ணுயிரிக் கூட்டமைப்பை பாதுகாப்பது, நாள்பட்ட ஈறு நோய்களை விரட்ட உதவும் என பல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Image 1544721


4. கனடாவின் கம்பர்லேண்ட் பகுதியில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் தேங்கியுள்ள நீரை, கட்டடங்களை வெப்பமூட்டவும், குளிரூட்டவும் உதவும் புவிவெப்ப ஆற்றலாக மாற்றும் முயற்சி துவங்கியுள்ளது. பாழடைந்த சுரங்கங்களை இதுபோல துாய எரிசக்தி மையங்களாக மாற்றினால், கார்பன் உமிழ்வைக் குறைக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Image 1544722


5. வயது முதிர்வு காரணமாக, ஆண்களின் செல்களில் 'ஒய்' குரோமோசோம் படிப்படியாக மறைவது கண்டறியப்பட்டுள்ளது. இது மாரடைப்பு, புற்றுநோய், அகால மரணத்திற்குப் பின் இருக்கும் முக்கியமான காரணியாக இருக்கலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us