PUBLISHED ON : மே 07, 2026 07:46 AM

1. மூளையின் சமிக்ஞைகளை உரையாக மாற்றும் நரம்பியல் தொப்பி (Neural Beanie) கருவி வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு வாயிலாக எண்ணங்களை எழுத்துக்களாக, நிமிடத்திற்கு 30 சொற்கள் வீதம் மொழிபெயர்க்கும். இக்கருவி, விசைப்பலகையை பயன்படுத்த இயலாதோருக்கும், குரல் பாதிக்கப்பட்டோருக்கும் உதவியாக இருக்கும்.
![]() |
2. ஒளியை எரிபொருளாகப் பயன்படுத்தும் 'மெட்டா ஜெட்' தொழில்நுட்பத்தை டெக்சாஸ் ஏ&எம் பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் வாயிலாக, பூமியிலிருந்து 4.37 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஆல்ஃபா சென்டாரியை, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பதில், சில பத்தாண்டுகளிலேயே மெட்டாஜெட் விண்கலன் மூலம் சென்றடையலாம்.
![]() |
3. சர்க்கரையைச் செரிக்க இயலாமைக்கும் மனப்பதற்றத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இக்குறைபாடு, குடல் நுண்ணுயிரிகளைப் பாதித்து, மூளையின் செயல்பாட்டில் வீக்கத்தை உண்டாக்குகிறது. உணவு முறை, செரிமானம் மற்றும் மனநலம் ஆகியவற்றிற்கு இடையிலான பிணைப்பை இந்த ஆய்வு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
![]() |
4. டோக்கியாவில், சோனியின் ரோபோவியலாளர்கள் உருவாக்கிய ஒரு ரோபோ, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் அனுபவம் வாய்ந்த வீரர்களை தோற்கடித்து அசத்தியுள்ளது. அதிவேகக் கண்காணிப்பு மற்றும் துல்லியமான கையசைவுகள் மூலம் சோனி ரோபோ இதை சாதித்துள்ளது.
![]() |
5. பூமியில் உயிர்கள் எப்படித் தோன்றின? அந்த மர்மத்தை ஒரு சிறிய ஆர்.என்.ஏ., மூலக்கூறு விளக்கக்கூடும். பிலிப் ஹோலிகர் என்ற ஆராய்ச்சி யாளரும் அவரது குழுவினரும் கண்டறிந்த இந்த 'ரிபோசைம்', ஆர்.என்.ஏ., இழைகளை, தானாகவே பிரதி எடுத்து, பல்கிப் பெருகும் திறன் கொண்டது. உயிர் உருவாவதற்கு, பல்கிப் பெருகும் திறன்கொண்ட மிக எளிய மூலக்கூறுகளே போதும் என்பதை இது காட்டுகிறது.





