தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!


PUBLISHED ON : ஜூன் 18, 2026 07:21 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2026 07:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சுவீடனின் கோதன்பர்க்கிலுள்ள, சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலை ஆய்வாளர்கள், பேக்கரியில் பயன்படும் ஈஸ்ட்டைக் கொண்டு, மட்கும் தன்மை கொண்ட புதிய கட்டடப் பொருளை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரியல் கலவையைப் பயன்படுத்தி, முப்பரிமாண அச்சு முறையில் சுவர்கள் மற்றும் அலங்காரத் தடுப்புகளை உருவாக்க முடியும்.

Image 1589293


2. சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலை ஆய்வாளர்கள், 4.4 மி.மீ., அளவே உள்ள நவீன அறுவைசிகிச்சை ரோபோவை உருவாக்கியுள்ளனர். கம்பியில்லா முறையில், காந்தப்புலங்கள் மூலம் இயக்கப்படும் இந்த நுண் ரோபோ, உடலின் கடினமான பகுதிகளுக்குச் சென்று திசுக்களை வெட்டுதல், மருந்து செலுத்துதல், மாதிரிகளைச் சேகரித்தல் மற்றும் வெப்ப சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட ஐந்து முக்கிய மருத்துவப் பணிகளை துல்லியமாகச் செய்யும் திறன் கொண்டது.

Image 1589294


3. அமெரிக்காவின் 'நாசா' பொறியாளர்கள், ஆர்ட்டெமிஸ் நிலவுப் பயணத் திட்டத்திற்காக 'பிகாசஸ்' என்ற அடுத்த தலைமுறை நிலவு வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இதை விண்வெளி வீரர்களே நேரடியாக இயக்க முடியும். பூமியிலிருந்தும் கட்டுப்படுத்தலாம். அல்லது தானோட்டி முறையிலும் அது இயங்கும்.

Image 1589295


4. பென்சில்வேனியா பல்கலை ஆய்வாளர்கள், ஒலியை ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதிக்கு மட்டும் துல்லியமாகக் குவிக்கும் ஒலிபெருக்கி மூடியை உருவாக்கி உள்ளனர். ஓர் ஒலி லென்ஸ் போலச் செயல்படும் இந்த மூடி, ஒலி அலைகளைக் குறுகிய கற்றையாக குவியப்படுத்தி, குறிப்பிட்ட இடத்தில் இருப்பவருக்கு மட்டும் தெளிவான இசையை கேட்கச் செய்யும்.

Image 1589296


5. மாசசூசெட்சை சேர்ந்த 'பாக்டோரியல் எனர்ஜி'யின் ஆய்வாளர் கள், மின் வாகனங் களுக்கான திடநிலை பேட்டரியை உருவாக்கியுள்ளனர். இதை தற்போது பிரபல டாட்ஜ் வாகன தயாரிப்பாளர்கள், தங்களது டேடோனா என்ற மின்சார காரில் பொருத்தி சோதித்து வருகின்றனர். இன்று பயன்படும் லித்தியம்- அயனி பேட்டரிகளை விட, அதிக ஆற்றல் மற்றும் பாதுகாப்பு கொண்ட இவை, வெறும் 18 நிமிடங்களில் 15 முதல் 90 சதவீதம் வரை அதிவேகமாகச் சார்ஜ் ஆகும் திறனை நிரூபித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us