PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM

01. அமெரிக்காவைச் சேர்ந்த நோட்ரே டேம் பல்கலை வெப்பத்தைத் தடுத்து ஒளியை மட்டும் அனுமதிக்கும் படலத்தை உருவாக்கியுள்ளது. இதை ஜன்னல்களில் ஒட்டிவிட்டால் ஒளியில் உள்ள வெப்பத்தை ஏற்படுத்தும் புற ஊதா, அகச்சிவப்புக் கதிர்களை வடிகட்டிவிடும். இதன் வாயிலாக வீடு, அலுவலகங்களில் குளிரூட்டிகள் இல்லாமலேயே குளிராக வைத்திருக்க முடியும்.
![]() |
02. மனித மூளையை மிகத் தெளிவாக ஸ்கான் எடுக்கக்கூடிய புதிய எம்.ஆர்.ஐ., இயந்திரத்தை பிரெஞ்சு மாற்று ஆற்றல் மையம் உருவாக்கியுள்ளது. வழக்கமாகத் தற்போது பயன்படும் இயந்திரங்கள் 3 டெஸ்லா காந்தப் புல ஆற்றலில் ஸ்கேன் செய்யும். இந்தப் புது இயந்திரம் 11.7 டெஸ்லாவில் எடுக்கும்.
![]() |
03. ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜியா தொழில்நுட்பக் கழகம் எல்லாவிதமான கொரோனா வைரஸ்களையும் அழிக்கவல்ல தடுப்பு மருந்தைக் கண்டறிந்துள்ளது. மருந்தை எலிகள்மீது சோதித்த போது கொரோனா, ஒமிக்ரான் வைரஸ்களை அழித்தது.



