/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
சர்வம் எட்ஜ்: உங்கள் அலைபேசியில் குடிகொள்ளும் ஏ.ஐ.,
/
சர்வம் எட்ஜ்: உங்கள் அலைபேசியில் குடிகொள்ளும் ஏ.ஐ.,
சர்வம் எட்ஜ்: உங்கள் அலைபேசியில் குடிகொள்ளும் ஏ.ஐ.,
சர்வம் எட்ஜ்: உங்கள் அலைபேசியில் குடிகொள்ளும் ஏ.ஐ.,
PUBLISHED ON : பிப் 19, 2026 07:37 AM

இந்தியாவிலேயே செயற்கை நுண்ணறிவு கருவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அண்மையில் பிரதமர் மோடி அறைகூவல் விடுத்தார். அதற்கேற்ப, தற்போது பல இந்திய நிறுவனங்கள், சுதேசி ஏ.ஐ., மென்பொருட்களை உருவாக்கி வருகின்றன.
அதில் ஒன்றுதான் பெங்களூருவைச் சேர்ந்த சர்வம் ஏ.ஐ., என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம். இது இணையம் இல்லாமல், ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களில் செயல்படும் 'சர்வம் எட்ஜ்' என்ற ஏ.ஐ. மென்பொருளை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது உள்ள பெரும்பாலான ஏ.ஐ., சேவைகள் தொலைதுாரத் தரவு மையங்களையே நம்பியிருக்கும் சூழலில், இது பரவலாக்கப்பட்ட கணினிச் செயல்பாட்டை நோக்கிய ஒரு திட்டமிட்ட நகர்வு என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
சர்வம் எட்ஜ், இந்திய மொழிகளில், பேச்சு அறிதல், மொழிபெயர்ப்பு மற்றும் உரையை பேச்சாக மாற்றுதல் ஆகியவற்றைச் செய்கிறது. சாதாரண நுகர்வோர் கருவிகளிலும் தடையின்றி இயங்கும் வகையில் இது மேம்படுத்தப்பட்டு உள்ளது.
தரவுகள் அவரவர் கருவிகளுக்குள்ளேயே இருப்பதோடு, அவற்றை அலசும் பணிகளும் கருவிகளிலேயே நிகழும். இது ஏ.ஐ., வேகமாக செயல்பட உதவும். இணைய வசதி சீரற்ற இடங்களிலும் தடையின்றிச் செயல்படுவது கூடுதல் சிறப்பு.
இதைவிட முக்கியமானது, இதன் தனிநபர் தரவுப் பாதுகாப்புதான். பயனரின் தகவல்கள் மொபைல் அல்லது லேப்டாப்பை விட்டு வெளியேறாது என்பது பாதுகாப்பை உறுதிப் படுத்துகிறது. இணையத் தொடர்பு சீரற்ற நிலையில் இருக்கும் இந்தியாவில், 'இந்த ஆப்லைன்' திறன் ஏ.ஐ., தொழில்நுட்பம் நல்ல வரவேற்பை பெறக்கூடும்.

