/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
சிந்தனையால் கருவிகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்
/
சிந்தனையால் கருவிகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்
சிந்தனையால் கருவிகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்
சிந்தனையால் கருவிகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்
PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

கணினிகளையும் கருவிகளையும் இயக்குவதற்கு உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம்தான், பிரெய்ன் கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ் (பி.சி.ஐ.) எனப்படும் மூளை கணினி இடைமுகம். போதாக்குறைக்கு, கணினிகளும் கருவிகளும், 'வியரபிள்' எனப்படும் அணி கருவிகளாகவும் மாறிவருகின்றன.
இதற்கு ஏற்றவகையில், மிகச் சிறிய பி.சி.ஐ., தொழில்நுட்பத்தை, அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப நிலையம் மற்றும் தென் கொரியாவின் இன்ஹா பல்கலை ஆகியவற்றின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தலையில் பொருத்திக்கொண்டு வேகமாக ஒருவர் ஓடினாலும், குதித்தாலும்கூட, நிலையாக மூளையை படிக்கும் திறன் கொண்டதாக இந்தக் கருவி இருக்கிறது.
முந்தைய முயற்சிகளில், பெரிய தொப்பியில் மின்முனைகளை வைத்து இணைத்தனர். அல்லது அறுவை சிகிச்சை மூலம் மூளைக்குள் மின் முனை பட்டைகளை பதித்தனர்.
ஆனால், இந்த புதிய உணரியை, 'கிரெய்னோடமின்' எனப்படும், மண்டை ஓட்டின் சிறிய பகுதியை நீக்கி, மூளையின் மேற்பரப்பில் வைத்து, மூடினால் போதுமானது.
மென்மையாக, சிறியதாக, வளைந்துகொடுக்கும் தன்மை கொண்ட இந்த உணரி, மூளையின் மின் சமிக்ஞைகளை, அதாவது, மனித சிந்தனைகளை, மொழிபெயர்த்து, வெளியில் இருக்கும் கருவிக்கோ, கணினிக்கோ அனுப்புகிறது.
மனித மனத்துக்கும் இயந்திரத்திற்கும் இடையே தடையற்ற தொடர்பை உருவாக்குகிறது. எனவே, தட்டச்சோ, தொடுதிரையோ தேவையில்லை.
செயற்கை உறுப்புகளை இயக்குதல், மாற்றுத்திறனாளிகள் கணினிகளை, கருவிகளை இயக்குதல் போன்றவற்றுக்கு இந்த பி.சி.ஐ., உணரி மிகவும் உதவிகரமாக இருக்கும்.

