sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

சாகச பயணி பட்டாம்பூச்சி

/

சாகச பயணி பட்டாம்பூச்சி

சாகச பயணி பட்டாம்பூச்சி

சாகச பயணி பட்டாம்பூச்சி


PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 11, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பலமான காற்று அடித்தால் விழுந்துவிடும் பலவீனமான உயிரி தான் பட்டாம்பூச்சி. ஆனால், ஓர் அதிசய பட்டாம்பூச்சி இனம் 4,200 கி.மீ., கடல் கடந்து பறந்து செல்கிறதாம். இதை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஐபீஇ (IBE) பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தத் தொலைதூரப் பயணத்தை வெறும் 5 முதல் 8 நாட்களுக்குள் நிறைவு செய்கிறது இந்தப் பட்டாம்பூச்சி.

இந்த அரும்பெரும் சாதனையைச் செய்பவை 'பெயின்டட் லேடி' பட்டாம்பூச்சிகள் (Painted lady butterflies) இவற்றின் அறிவியல் பெயர் வனெசா கார்டுய் (Vanessa cardui). இந்தச் சிறிய உயிரினம் ஒருமுறை போதுமான அளவு உணவை எடுத்துக் கொண்டது என்றால், எங்கும் ஓய்வெடுக்காமல் 780 கி.மீ., பறக்கும். ஆனால், கடக்க வேண்டிய துாரமோ அதிகம். இந்தப் புத்திசாலி உயிரி இயற்கையாக வீசும் கடற்காற்றை அறிந்து வைத்திருக்கிறது. முற்காலத்தில் பாய்மரக் கப்பல்களில் வணிகம் செய்தவர்கள் இதை அனுசரித்தே பயணம் செய்தனர். இதனால், இதற்கு வணிகக் காற்று (The trade winds) என்று பெயர் வந்தது. இந்தப் பட்டாம்பூச்சி தனது ஆற்றலையும், காற்றின் போக்கையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தி இவ்வளவு நெடிய துாரத்தைக் கடக்கிறது.

முதன்முதலில் இவை தென் அமெரிக்காவின் அட்லான்டிக் கரைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இனம் உலகம் முழுக்க வாழ்ந்தாலும் ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட, தென் அமெரிக்காவில் வாழ்பவை தான் மரபணுரீதியாக அதிக நெருக்கத்துடன் உள்ளன. இதற்குக் காரணம் இவை கடல் கடந்து இனப்பெருக்கம் செய்வதற்காக இந்த நான்கு கண்டங்களுக்கு இடையே பயணிப்பது தான்.

விஞ்ஞானிகள் இந்த இனத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகளைச் சோதிக்கும்போது அவை ஆப்பரிக்காவில் மட்டுமே உள்ள சில தாவரங்களின் மகரந்தத்தைச் சுமந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதன் வாயிலாக அவை கடலைக் கடப்பதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஆற்றல் தரும் அளவிற்குப் போதுமான உணவை உண்டுள்ளன என்பதை அறிய முடிந்தது.

கோடைக்காலத்தில் ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து தென் அமெரிக்கா நோக்கி வீசும் காற்று தான் இந்தப் பட்டாம்பூச்சிகளுக்கு உதவுகின்றன என்பதும் தெரியவந்தது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு பூச்சிகளின் புலப்பெயர்வு, வலசைச் செல்லுதல் பற்றிய நம் அறிதலை இன்னும் மேம்படுத்தி உள்ளது என்கின்றனர் உயிரியலாளர்கள்.






      Dinamalar
      Follow us