sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

சூரிய பலகைகளுக்கு பாசி தரும் பாடம்

/

சூரிய பலகைகளுக்கு பாசி தரும் பாடம்

சூரிய பலகைகளுக்கு பாசி தரும் பாடம்

சூரிய பலகைகளுக்கு பாசி தரும் பாடம்


PUBLISHED ON : பிப் 12, 2026 07:30 AM

Google News

PUBLISHED ON : பிப் 12, 2026 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடல் பாசிகளுக்குள் வியக்கத்தக்க தற்காப்பு நுட்பம் ஒன்று ஒளிந்துள்ளது. 'சைபோனின்' (Siphonein) என்ற நிறமி, கடும் சூரிய வெப்பத்தால் ஏற்படும் சேதத் திலிருந்து பச்சை பாசிகளைப் பாதுகாப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த இயற்கை 'சூரியக் கவசம்' சூரிய வெப்பத்தைத் தடுத்தாலும், ஒளிச்சேர்க்கையை தடையின்றித் தொடர உதவுகிறது.

ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியை வேதி ஆற்றலாக மாற்ற உதவுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமான வெளிச்சம் குளோரோபில் எனும் உயிரணுக்களைச் சிதைக்கக்கூடிய மூலக்கூறுகளை உருவாக்கி விடும். இங்குதான் சைபோனின், சூரிய வெப்ப ஆற்றலைத் திறம்படத் தடுத்து, கடல் பாசிகளின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது.

இந்த நுட்பம் தற்போது பொறியாளர்களைப் பெரிதும் க வர்ந்துள்ளது. பாசிகளில் உள்ள இந்தத் தற்காப்பு மூலக்கூறுகளைப் போலவே, சூரிய மின்சக்திப் பலகைகளையும் வடிவமைக்க முடியுமா என்ற ஆய்வு துவங்கியுள்ளது. இயற்கையின் இந்த 'ஒளிப் பாதுகாப்பு' முறையைப் பின்பற்றுவதன் வாயிலாக, அதிகத் திறன் கொண்ட, நீண்ட காலம் உழைக்கக்கூடிய சூரிய பலகைகளை உருவாக்க முடியும்.

இந்தக் கண்டுபிடிப்பு வெறும் பாசிகளைப் பற்றிய உயிரியல் தகவல் மட்டுமல்ல. இது அடுத்த தலைமுறை சூரிய மின்சக்தித் தொழில்நுட்பத்திற்கான ஒரு வரைபடம்.






      Dinamalar
      Follow us