sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

பூமிக்கருவில் ஒளிந்திருக்கும் உயிர் ரகசியம்

/

பூமிக்கருவில் ஒளிந்திருக்கும் உயிர் ரகசியம்

பூமிக்கருவில் ஒளிந்திருக்கும் உயிர் ரகசியம்

பூமிக்கருவில் ஒளிந்திருக்கும் உயிர் ரகசியம்


PUBLISHED ON : பிப் 12, 2026 07:31 AM

Google News

PUBLISHED ON : பிப் 12, 2026 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூமியின் ஆழத்தில் உருகிய நிலையில் பல உலோகங்கள் உள்ளன. அந்த உலோகக் குழம்புகளின் சுழற்சியால்தான் பூமிக்கு காந்தப் புலம் உருவாகிறது. காலப்போக்கில் மாறக்கூடிய இந்த காந்தப்புலத்தின் தடயங்கள், பழங்காலத் தாதுக்களுக்குள் இன்னும் பாதுகாப்பாக உள்ளன.

இந்த ஆதிகால காந்தப்புல தடயங்களை ஆய்வு செய்தபோது, பூமியை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு மாற்றங்களோடு அவை ஒத்துப்போவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனால், நம் காலடியில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் ஆழத்தில் நிகழும் மாற்றங்கள், மேற்பரப்பில் உள்ள ஆக்சிஜன் அளவைத் தீர்மானிக்கக்கூடும் என்ற புதிய பார்வையை 'சயன்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியான ஒரு ஆய்வு முன்வைக்கிறது. புவியின் ஆழ் மைய இயக்கத்திற்கும், பூமி மேல் சிக்கலான உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான காற்றுக்கும் இடையே ஒரு நுட்பமான பிணைப்பு இருப்பதை இது உணர்த்துகிறது.

இது ஒரு நேரடித் தொடர்பு என்று இன்னும் முழுமையாக நிரூபிக்கப் படவில்லை.

இருப்பினும், பூமி எவ்வாறு உயிர்வாழத் தகுந்த இடமாக மாறியது என்பதைப் புரிந்துகொள்ள ஒரு புதிய கோணத்தை இந்த ஆய்வு திறந்துவிட்டுள்ளது. பூமியின் ஆழமான செயல்பாடுகளும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாக இருக்கலாம் என இந்த ஆய்வுத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.






      Dinamalar
      Follow us