/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
பணம் செலுத்த இனி இந்த மோதிரம் போதும்
/
பணம் செலுத்த இனி இந்த மோதிரம் போதும்
PUBLISHED ON : அக் 30, 2025 12:00 AM

முதலில் அட்டை. பிறகு மொபைல், அடுத்து, பணமில்லா பரிவர்த்தனை தொழில்நுட்பத்தில் வருகிறது, மோதிரம். சென்னையின் ஐ.ஐ.டி., பட்டதாரிகள் துவங்கிய 'மியூஸ் வியரபிள்ஸ்' (Muse Wearables) என்ற புத்திளம் நிறுவனம், என் பி.சி.ஐ.,யுடன் இணைந்து, இந்தியாவின் முதல் அணியக்கூடிய பணம் செலுத்தும் முறையை (Wearable Payments Ecosystem) உருவாக்கியுள்ளது. பிரபல ரூபே (RuPay) நிறுவனத்தின் வாயிலாக தற்போது நடைமுறைக்கு வருகிறது.
'ரிங் ஒன்' (Ring One) என்ற இந்தக் கருவி, அலங்கார மோதிரம் போல இருந்தாலும், பக்காவான, பணப் பரிவர்த்தனை கருவியாகவும் செயல்படுகிறது. இதை எந்தவொரு என்.எப்.சி. டெர்மினல் கருவியின் மீதும் லேசாக ஒற்றினாலே, தொகையை செலுத்தலாம். இதனுடன் மொபைல் இணைப்புகூடத் தேவையில்லை. கடவுச்சீட்டுகளில் பயன்படும் அதே தரத்திலான 'பாதுகாப்பு அம்சமுள்ள சில்லு' (Secure Element Chip) இதில் உள்ளதால், ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வங்கிகளுக்கு இணையான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
ஏற்கனவே 40 நாடுகளில் பயன்பாட்டில் உள்ள 'மியூஸ் வாலெட்' தளம், இப்போது ரூபே ஒருங்கிணைப்புடன் இந்தியாவிற்கு களமிறங்குகிறது. இந்தக் கருவி இந்திய தொழில்நுட்ப இறையாண்மையை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கியமான படி. இது வடிவமைப்பு நேர்த்தியுடன் நிதித் தொழில் நுட்பத்தை இணைக்கும் இந்த வசதி, விரைவில் நாடெங்கும் பரவும் என எதிர்பார்க்கலாம்.

