sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 07, 2026 ,தை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

எடிசனின் மின்விளக்கில் 'கிராபீன்' ஒளிந்திருந்ததா?

/

எடிசனின் மின்விளக்கில் 'கிராபீன்' ஒளிந்திருந்ததா?

எடிசனின் மின்விளக்கில் 'கிராபீன்' ஒளிந்திருந்ததா?

எடிசனின் மின்விளக்கில் 'கிராபீன்' ஒளிந்திருந்ததா?


PUBLISHED ON : பிப் 05, 2026 07:38 AM

Google News

PUBLISHED ON : பிப் 05, 2026 07:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாமஸ் ஆல்வா எடிசன், 1879ல் மின்விளக்கைக் கண்டறிந்தார். அப்போதே, அவர் தற்செயலாக 'கிராபீன்' (Graphene) என்ற அதிசயப் பொருளையும் உருவாக்கியிருக்கலாம் என, ரைஸ் பல்கலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கிராபீன், 21-ஆம் நுாற்றாண்டு இயற்பியலின் மைல்கல்லாகக் கருதப்படும் ஒரு பொருள். அது 19-ஆம் நுாற்றாண்டின் எளிய கருவியில் மறை ந்திருந்தது வியப்பை அளிக்கிறது.

ஆய்வாளர்கள் எடிசன் காலத்து கார்பன் இழை பல்புகளை மீண்டும் உருவாக்கிச் சோதித்தபோது, மூலக் கூறுகளின் வேதிவினையால், 'டர்போஸ்ட்ரேடிக் கிராபீன்' என்ற பொருள் உருவாவதைக் கண்டறிந்தனர். நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்கள் இல்லாமலேயே, அதீத வெப்பத்தின் வாயிலாக கார்பன் அணுக்களை கிராபீன் அடுக்குகளாக மாற்ற முடியும் என்பதை இந்த ஆய்வு ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளது.

எடிசனின் அசல் பல்புகளில் கிராபீன் இப்போதும் இருக்குமா என்பதை உறுதிசெய்ய முடியாது. என்றாலும், பழைய கண்டுபிடிப்புகளை, நவீனக் கருவிகள் கொண்டு மீண்டும் ஆராய்வது புதிய அறிவியல் விளக்கங்களைத் தரும் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று. வரலாற்றை திருப்பிப் பார்ப்பது, அறிவியலுக்கு உதவும்.






      Dinamalar
      Follow us