sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

ஆரோவில் ஒரு ஆச்சரியம்! - புதுச்சேரிக்கு போவோமா!

/

ஆரோவில் ஒரு ஆச்சரியம்! - புதுச்சேரிக்கு போவோமா!

ஆரோவில் ஒரு ஆச்சரியம்! - புதுச்சேரிக்கு போவோமா!

ஆரோவில் ஒரு ஆச்சரியம்! - புதுச்சேரிக்கு போவோமா!


PUBLISHED ON : ஜன 15, 2020

Google News

PUBLISHED ON : ஜன 15, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என விரும்புகிறவர்கள் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் கனவு உலகமான சர்வதேச நகர் ஆரோவில் செல்லலாம். அப்படி என்ன இந்நகரில் இருக்கிறது. வாங்க இந்த பொங்கல் விடுமுறைக்கு சுற்றுலா சென்று வரலாம்.

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் விழுப்புரம் மாவட்டம் எல்லையில் இந்த சர்வதேச நகர் அமைந்துள்ளது. நாடு, மதம், இனம், அரசியல் என்று எந்த வேறுபாடின்றி உலகில் உள்ள யார் வேண்டுமானாலும் இந்நகரில் முறையாக விண்ணப்பித்து, அனுமதி வாங்கி வாழலாம். வயது பாகுபாடின்றி எல்லோருக்கும் ஒரேமாதிரியான உணவு வழங்கப்படுகிறது. எல்லாருமே அவர்களால் முடிந்த வேலைகளை செய்கிறார்கள். பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் மறுசுழற்சி முறைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

பேரமைதி நகர் என்ற அழைக்கப்படும் ஆரோவில் நகரத்திற்கு, அமைதி வேண்டியே வெளிநாட்டினர் வந்து வாழ்ந்து வருகிறார்கள். இன்று உலகின் 85 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்டோர் தங்கி சேவை செய்கின்றனர். குறைந்தது 5 ஆண்டுகளாவது இங்கு தங்க வேண்டும் என்பது நிபந்தனை. விரும்பினால் தொடர்ந்து தங்கலாம். இதற்காக அவர்களுக்கு சிறப்பு விசா வழங்கப்படுகிறது.

இல்லாதபட்சத்தில் தங்கும் வீட்டை மற்றவரிடம் ஒப்படைத்து விட்டு செல்லலாம்.

ஆரோவில் அமைந்த பின்னணி ஆரோவில் சிட்டி ஆப் டான்... அதாவது சூரியன் உதிப்பதற்கு முன் வானம் எப்படி இருக்குமோ அதுபோல் இருப்பதைதான் ஆரோவில் என்கிறார்கள். வேறு ஒருகாரணமும் உண்டு. அரபிந்தோ எனும் சுதந்திர போராட்ட தியாகி ஒரு கட்டத்தில் மனிதம் போற்ற வேண்டும்; மனிதர்கள் எல்லோருக்கும் சமமான இடம் வேண்டும் எனக்கருதி இந்நகரை 1914ல் உருவாக்க திட்டமிட்டார். இவருக்கு பின் அவரது சிஷ்யை 'அன்னை' என்றழைக்கப்படும் மீரா பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 3,500 ஏக்கரில் இந்நகரை உருவாக்கினார்.

அன்னை ஆலயம்

1968ல் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 143 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

அனைவரும் தங்கள் நாட்டு, மாநிலங்களில் இருந்து கொண்டு வந்த ஒருபிடி மண்ணை கொண்டு ஆரோவில் உருவாக்கப்பட்டது. தங்கத்தாலான தாமரை தியான பீடம் அமைக்கப் பட்டுள்ளது. இதுதான் ஆரோவில்லின் அடையாளமும் கூட. இதை உருவாக்க 37 ஆண்டுகள் ஆயின. 1421 தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த தியான பீடத்தை அன்னை ஆலயம் என்ற பொருளில் 'மாத்ரி மந்திர்' என்கின்றனர். சூரியகதிர்கள் உள்ளே விழும்படி இப்பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுள் ஜெர்மன் நாட்டின் விலை உயர்ந்த ஸ்டிபகம் வைக்கப்பட்டு, அதை சுற்றி தாமரை இதழ்கள் கொண்ட குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அதை கேட்டுக்கொண்டே தியானம் செய்வது மனதை சாந்தப்படுத்தும்.

ஆரோவில் ஒரு ஆச்சரியம்

இங்கே 7 கல்வி நிறுவனங்கள் உண்டு. இயற்கை சார்ந்த படிப்புகள் மட்டுமே இங்கு கற்றுத்தரப்படுகின்றன. கட்டணம், தேர்வு கிடையாது. மின்சாரம் இலவசம். இங்குள்ள சதானா காட்டில் விளையும் காய்கறி, பழங்களை விற்று ஆரோவில் நகரத்திற்கு நிதி சேர்க்கிறார்கள். இதற்காக ரூபாய் நோட்டுக்கு பதில் 'ஆரோ கார்டு' பயன்படுத்துகிறார்கள். தங்கியிருக்கும் வெளிநாட்டவர் மற்றவர்களுக்கு கைத் தொழில்கள் கற்றுத்தருகிறார்கள். 3 ஏக்கரில் குழந்தைகள் காடு உள்ளது. இதை குழந்தைகள்தான் பராமரிக்கிறார்கள்.

90 வயதான ராகர் ஆங்கர் என்பவர்தான் இந்த ஆரோவில் நகரை வடிவமைத்தவர். நகரில் மொத்தம் 6 பகுதிகள் உள்ளன. தொழில் பகுதி, சர்வதேச பகுதி, கல்வி, கலாசாரம், பசுமை, குடிசை பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியை கண்காணிக்க ஒவ்வொருவருக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வந்து தங்கி சேவை செய்வது, இங்கேயே தங்கி சேவை செய்வது என தன்னார்வலர்கள் இருவகைகளாக உள்ளனர்.

எப்படி செல்வது

தென்மாவட்டங்களில் இருந்து ரயிலில் செல்வோர் விழுப்புரத்தில் இறங்கி கார் அல்லது பஸ்சில் 41 கி.மீ., துாரம் பயணித்து ஆரோவில்லை அடையலாம். கார், பஸ்சில் செல்வோர் விழுப்புரம் வழியாக செல்லலாம்.

எப்போது செல்லலாம்

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஆரோவில் நகரை சுற்றிப்பார்க்கலாம். அனுமதி இலவசம். ஞாயிறு மதியம் 1:00 மணிக்கு மேல் விடுமுறை. 'மாத்ரி மந்திர்' எனும் தியான பீடத்திற்கு மேற்கூறிய நாட்களில் தினமும் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை செல்லலாம். 1967 பிப்.,28 ல் ஆரோவில் நகரம் துவக்கப்பட்டது. இந்நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்நாளில் 'போன் பயர்' எனும் கூட்டு நெருப்பு ஏற்றி அனைத்து நாட்டவரும் கூட்டு தியானத்தில் ஈடுபடுவது ஆரோவில்லின் சிறப்பு.

புதுச்சேரி சுற்றுலா தலங்கள் என்னென்ன

வந்தது வந்துட்டோம். அப்படியே அருகில் உள்ள புதுச்சேரிக்கு செல்வோம். சரக்கு அடிப்போம் என 'யூத்'கள் ஒருபுறம் விரும்பினாலும், குடும்பத்துடன் செல்லும்போது ராக் பீச், பாரதி மியூசியம், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், பிரெஞ்சு காலனி என சுற்றுலா தலங்களை பார்க்கலாம். இவ்வளவுதான் புதுச்சேரியா என எண்ணவேண்டாம். பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

ஊசூடு ஏரி

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் வழுதாவூர் சாலையில் இந்த ஏரி உள்ளது. பறவைகள் சரணாலயமாகவும் உள்ளது. குழந்தைகள் விளையாடும் வகையில் ஏரிக்கரையை வடிவமைத்திருக்கிறார்கள். படகு சவாரி உண்டு.

பாரடைஸ் பீச்

புதுச்சேரி - கடலுார் ரோட்டில் 8 கி.மீ., துாரத்தில் உள்ளது. கடலோடு ஆறு கலக்கும் இடமாகவும் இருப்பதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும். மழைநீர் நடனமும் உண்டு. மணல் பைக் ரைடு, மிதக்கும் படகு வீடு சவாரியும் உண்டு. இரவு படகு வீட்டிலேயே தங்கலாம். உணவு எல்லாம் அங்கேயே ஏற்பாடு செய்யப்படும்.

தாவரவியல் பூங்கா

மீன் காட்சியகம், இசைக்கேற்ப ஆடும் நீருற்று, பாறைகளுடன் கூடிய ஜப்பான் தோட்டம், அல்லிகுளம், மினி ரயிலில் பயணம் இங்கு சிறப்பு. பிப்., தோறும் இங்கு மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. புதுச்சேரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ளது.

அரிக்கன்மேடு

தொல்லியல் இடங்களில் தவிர்க்க முடியாத இடம் இது. புதுச்சேரி - கடலுார் ரோட்டில் 6 கி.மீ., துாரத்தில் உள்ளது. அரியான்குப்பம் கடற்கரையோரம் உள்ளது. சோழர்கள்- ரோமானியர்களுக்கு இடையேயான மிகப்பெரிய வாணிப தலமாக கருதப்படும் இங்கு அதன் எச்சங்கள் சாட்சிகளாக இன்றும் இருக்கின்றன. ரோமானிய பேரரசர் அகஸ்டஸின் உருவம் பொறித்த தங்க நாணயம் இங்கு கண்டு எடுக்கப்பட்டது.

சண்டே மார்க்கெட்

2 கி.மீ., துாரமுள்ள புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் அமைந்துள்ள இம்மார்க்கெட் ஞாயிறு மட்டுமே இயங்கும். காலை 6:00 - இரவு 11:00 மணி வரை இயங்கும். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். விலை மலிவாகவும், தரமாகவும் இருப்பது இம்மார்க்கெட் ஸ்பெஷல்.

ராம்ஸ்






      Dinamalar
      Follow us