sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

அகத்தியருக்கு ஓர் ஆலயம்!

/

அகத்தியருக்கு ஓர் ஆலயம்!

அகத்தியருக்கு ஓர் ஆலயம்!

அகத்தியருக்கு ஓர் ஆலயம்!


PUBLISHED ON : ஜன 15, 2019

Google News

PUBLISHED ON : ஜன 15, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அகத்திய மாமுனிவர் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்பொதிகை மலையில் தோன்றியதாக ஐதீகம். 'தொல்காப்பியம், திருவள்ளுவர் காலத்துக்கு முன்பே செந்தமிழ் வளர்த்தவர் அகத்தியர்,' என்பது சான்றோர் வாக்கு.

தென்பொதிகை மலையின் பாபநாசம் அகத்தியர் அருவிக்கு சற்று மேலே சென்றால் அகத்தியர் யோக நிலை கல்வெட்டு மற்றும் அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ள கல்வெட்டுகள் உள்ளன.

அகத்திய ஓலைச்சுவடிகளில் வர்மக்கலை குறித்து, ''இரு ஆறு வருடம் காத்து, அடி, பிடி, வெட்டு, குத்து, கற்று, பின் வரிசையுடன் வர்ம இலக்கு செய்யே,'' என குறிப்பிடப்பட்டுள்ளது. வர்மக்கலையை கண்டறிந்து மனித இனம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்காக உலகிற்கு வழங்கியவரும் அகத்தியர் தான். வர்மக்கலை ஆசான் எனவும் அகத்தியர் போற்றப்படுகிறார்.

'இந்தியன்' சினிமாவில் வர்மக்கலையை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்துவார் கமல். அவருக்கு வர்மக்கலை நுட்பங்களை கற்று கொடுத்தவர் மதுரை விராட்டிபத்துவை சேர்ந்த 'மஞ்சா வர்மக்கலை தலைமை ஆசான்' ராஜேந்திரன். இவர், காலத்தால் அழியாத வர்மக்கலையை

உலகிற்கு தந்த அகத்தியருக்கு கோயில் எழுப்ப முடிவு செய்தார்.

இதற்காக அகத்தியர் பற்றிய ஏராளமான புத்தகங்கள், அவர் போதித்த வர்மக்கலை ரகசியங்களை கற்றார். கடந்த 2011ல் மதுரை மாவட்டம் எழுமலை அருகே டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கினார். அதில் 25 சென்ட் பரப்பில் தென்கைலாயப் பெருமாள் கோயில் எழுப்பினார்.

கோயில் வளாகத்தில் விநாயகர், முருகன், அகத்தியருக்கு தனித்தனி சன்னதி அமைத்தார். இங்குள்ள அகத்தியர், கால்களை பின்னி வலது கால் முன்பாகவும், இடது கால் பின்பாகவும் வைத்து யோக நிலையில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார். அகத்தியர் பற்றிய புராணக் குறிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளபடி அகத்தியரின் உண்மையான யோக நிலை மாறாமல் குளிர்ந்த, நன்கு விளைந்த, கருங்கல்லினால் ஆன சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அமாவாசை, பவுர்ணமி, புரட்டாசி சனி, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடத்தி வருகிறார்.

வர்மக்கலை குறித்து ராஜேந்திரன்...

'அகம்' அப்பழுக்கற்ற நிலையில் துாய்மையாக இருக்க வேண்டும். அதற்காக இறை பக்தியுடன் கூடிய நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ள வேண்டும், என்பதை அகத்தியர் போதித்தார். அவர் கண்டறிந்த வர்மக்கலை என்பது அறிவியல் சார்ந்தது; பாரம்பரியம் மிக்கது. பிற தற்காப்பு கலைகளில் உடல் உழைப்பு மட்டுமே இருக்கும். வர்மக்கலை உடலுக்கும், மூளைக்கும் தொடர்புடையது. நரம்பு, எலும்பு, ரத்த ஓட்டம், சர ஓட்டம் (மூச்சுடன் கலந்த காற்று) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் ஆதிக்கலையே வர்மக்கலை.

போருக்கு புறப்படுபவன் இடது காலை முன் வைக்க வேண்டும். அப்போது அவனுக்கு கோபம் மேலோங்கும். இடது கால் நரம்புக்கும், மூளைக்கும் தொடர்புள்ளது. போரில் வெற்றி பெற்ற பின் வலது காலை, இடது தொடையில் போட்டு அமர்ந்தால் அது வெற்றி, அமைதியை குறிக்கும்.

மல் யுத்தம் செய்யும்போது இரண்டு தொடைகளையும் மல்யுத்த வீரர் கைகளால் தட்டுவார். அப்போது அவரது இருதயம் துடிக்கும்; புது தெம்பு, உத்வேகம் பிறக்கும்.

தொடை நரம்புக்கும், இருதயத்துக்கும் தொடர்பு உள்ளது. இவையெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் இமை பொழுது உடலுக்குள் நடக்கும் உன்னத மாற்றங்கள். இவற்றை முழுமையாக கண்டுணர்ந்து வெளியே கொண்டு வந்தவர் தான் அகத்தியர்.

வர்மக்கலையை முழுமையாக யாராலும் அறிய முடியாது. இது முழுக்க முழுக்க அகத்தியரால் கண்டுணர்ந்து போற்றப்பட்டது.

ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு சொந்தமானதல்ல. எனவே தான் அகத்தியருக்கு அவரின் உண்மையான யோக நிலையை விளக்கும் வண்ணம் கோயில் எழுப்பி வணங்கி வருகிறோம், என்றார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் இருந்து டி.கிருஷ்ணாபுரம் செல்ல பஸ் வசதி உள்ளது. அகத்தியரை வழிபட 96297 71606 ல் அழைக்கலாம்.






      Dinamalar
      Follow us