sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

அழகான அந்தாதி - அருந்ததி நாயர்

/

அழகான அந்தாதி - அருந்ததி நாயர்

அழகான அந்தாதி - அருந்ததி நாயர்

அழகான அந்தாதி - அருந்ததி நாயர்


PUBLISHED ON : ஜன 14, 2017

Google News

PUBLISHED ON : ஜன 14, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்மேற்கு தென்றலாய் தவழ்ந்து வரும் தை மகளின் தங்கையோ... தகதகக்கும் தங்க தேகமெல்லாம் சுருள் வாழையின் மென்மையோ, கிளர்ச்சி கிளப்பும் கவர்ச்சி சிரிப்பில் இருப்பது இனிக்கும் கரும்போ, விழி விளிம்புகளின் ஓரமெல்லாம் நெற்பயிர்களின் அரும்போ என்று எண்ண வைக்கும், கேரள தேசம் தாண்டி தமிழுக்கு வந்த கோலிவுட் ரங்கோலி, கவிதைக்குள் சிக்காத அழகியல் அந்தாதி, நிலத்தில் நளினமாய் நடக்கும் வான்மதி... நடிகை அருந்ததி நாயர், 'தினமலர்' வாசகர்களுக்காக மட்டும் அளித்த பொங்கல் ஸ்பெஷல் பேட்டி...

* 'சைத்தான்' வாய்ப்பு எப்படி வசமானது?

இந்த படத்தின் ஐஸ்வர்யா, ஜெயலட்சுமி என்ற இரட்டை கேரக்டர்களுக்கு 'ரவுண்ட் பேஸ்' ஹீரோயினை தேடிய, விஜய் ஆன்டனி என்னை தேர்வு செய்தார்.

* விஜய் ஆன்டனியின் நடிப்பு, இசை எது பிடிக்கும்?

ரெண்டுமே ரொம்ப பிடிக்கும், சைத்தானில் நான் சொந்தக் குரலில் டப்பிங் கொடுக்க நிறைய உதவி செய்தார்.

* பேய் பயம்..?

பயமா எனக்கா... இல்லவே, இல்லை. நடிப்பு அனுபவம் அதிகம் இல்லாத நான், ஒரே 'டேக்'ல நடிச்சேன்.

* டைட்டில் 'சாங்'

படத்தில் ஹீரோவுக்கு இணையாக என்னோட ஜெயலட்சுமி கேரக்டருக்கான பாட்டு இருக்கும்னு எதிர்பார்க்கல.

* தமிழ் படத்தில் கேரளா கேர்ள்ஸ் அதிகமாக சுத்துறாங்களே...

இப்பெல்லாம் தமிழில் மண் சார்ந்த படங்கள் அதிகம் எடுக்குறாங்க. அதுக்கு கேரள ஹீரோயின்கள் தான் பொருத்தமா இருக்காங்க...

* ஹீரோயின்களே 'ஐயிட்டம் சாங்'...

என்னை மாதிரி தென் இந்திய ஹீரோயின்கள் 'ஐயிட்டம் சாங்' ஆடுறதில்லை, ஆடினாலும், ரசிகர்களுக்கு பிடிக்காது.

* அருந்ததிக்காக ஒரு கேரக்டர்...

எனக்காக அப்படி ஒரு வாய்ப்பு வந்தா சந்தோஷமா நடிப்பேன். ஆனால், நாலு ஹீரோயின் சான்ஸ் எல்லாம் தேடி வருதே...

* கடவுள் பக்தி...

தினமும் 'ராம நாமம்' சொல்வேன், கஷ்டம் வந்தால் கடவுளை வேண்டிக்குவேன்; அது வந்த வழி தெரியாமல் காணாமல் போகும்.

* 'ஆல் டைம் மேக்கப்'பில் வலம் வருபவரா அருந்ததி?

ஷூட்டிங்ல மட்டும் தான் 'மேக்கப்', மற்ற நாட்களில் 'நோ மேக்கப்'.

* சினிமா ரசிகர்கள்...

ரசிகர்கள் பார்வை மாறணும். 'மீம்ஸ்' போட்டு கலாய்க்குறது வருத்தம்.

* நெக்ஸ்ட் ரிலீஸ்...

தமிழ், தெலுங்கில் '100 டிகிரி செல்சியஸ்' படம் ரீலீஸ். இயக்குனர் எழில் பாரதியின் 'பகல்' படத்தில் நடிக்கிறேன்.

* பொங்கல் ஸ்பெஷல்...

சர்க்கரை பொங்கலுக்காக 'ஐயாம் வெயிட்டிங்'...

ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்!






      Dinamalar
      Follow us